கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார்.
அவரை எதிர்த்து களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கடுமையாக விமர்சித்தார்.
“ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர், கமலா ஹாரிஸ் பிறக்கும் போதே அப்படித்தான்” எனக் கூறினார்.
அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது கடும் விமர்சனங்களையும் டிரம்ப் முன்வைத்தார். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கிலேயே சட்டவிரோதமாக பலர் குடியேற்றப்பட்டு வருவதாக விமர்சித்த டிரம்ப், தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க |
பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது! – மத்திய அரசு அறிவிப்பு
அமெரிக்காவுக்காக சட்டவிரோதமாக வந்து வசிப்போர், பல குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, டிரம்பின் சர்ச்சை பேச்சுக்கு, அவரின் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
.