ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடத்திய “Its Glowtime” நிகழ்வில் AirPods 4-ஐ அறிமுகம் செய்தது. AirPods 4 ஆனது மொத்தம் இரண்டு வேரியன்டஸ்களில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இதில் ஒரு வேரியன்ட் ANC ஆப்ஷனுடனும் மற்றொன்று ANC ஆப்ஷன் இல்லாமலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு AirPods 4 மாடல்களும் இப்போது இந்தியாவில் ப்ரீ-ஆர்டருக்குக் கிடைக்கின்றன. AirPods 4-ஆனது ஓபன்-இயர் டிசைன் இயர்போன்கள் ஆகும்.
இதில் AirPods 4 ANC வெர்ஷன் விலை சற்று அதிகம் கொண்டது. இந்த புதிய AirPods லைன்அப்பானது ஹெட் டிராக்கிங்குடன் கூடிய spatial audio, வாய்ஸ் ஐசொலேஷன் மற்றும் அடாப்டிவ் ஈக்வலைசர் போன்ற பல அம்சங்களைப் பெறுகிறது.
இந்தியாவில் AirPods 4 வேரியன்ட்ஸ்களின் விலை விவரங்கள்:
Glowtime நிகழ்வில் அறிமுகபடுத்தப்பட்ட பிற புதிய ஆப்பிள் தயாரிப்புகளை போலவே AirPods 4 வரும் செப்டம்பர் 20 முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கும். ANC ஆப்ஷன் இல்லாத AirPods 4-ன் விலை ரூ.12,900 ஆகும். அதே நேரம் Active Noise Cancellation அம்சம் கொண்ட AirPods 4-ன் விலை ரூ.17,900 ஆகும்.
AirPods 4-ல் இருக்கும் அம்சங்கள்:
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள AirPods 4 வேரியன்ட்ஸ்கள் இரண்டுமே ஒரே மாதிரியானவை மற்றும் இவற்றின் பட்ஸ்கள் ஒரே மாதிரியான எடையை கொண்டுள்ளன, தவிர AirPods 4 ANC வெர்ஷனில் உள்ள சார்ஜிங் கேஸ் ஃபைண்ட் மை நெட்வொர்க்கை செயல்படுத்த ஏதுவாக ஸ்பீக்கரை கொண்டுள்ளது. புதிய AirPods 4-ஆனது ஏற்கனவே குறிப்பிட்டது போல ஹெட் டிராக்கிங்குடன் கூடிய spatial audio போன்ற அம்சங்களுடன் வரும் அதே நேரம் AirPods 4 ANC வெர்ஷனானது ட்ரான்ஸ்பரன்ஸி மோட் கொண்டுள்ளது.
Sony XM1000x5, Samsung Galaxy Buds 3 Pro உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் பேஸ் AirPods 4 மற்றும் ப்ரீமியம் AirPods 4 (ANC) உடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு மாடல்களுமே ஒரே H2 சிப் மூலம் இயக்கப்படுகின்றன மற்றும் டஸ்ட்& வாட்டர் ரெஸிஸ்டன்சிற்கான IP54 ரேடடிங்கை கொண்டுள்ளது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
இந்த AirPods-களுக்காக நிறுவனம் USB Type-C சார்ஜிங் கேஸை அளித்துள்ளது. மேலும் இவை கனக்ட்டிவிட்டிகா ப்ளூடூத் 5.3-ஐ சபோர்ட் செய்கிறது மற்றும் லேட்டஸ்ட் ஆப்பிள் பிளாட்ஃபார்ம்ஸ்களுடன் வேலை செய்கின்றது. AirPods 4 மற்றும் AirPods 4 ANC வேரியன்ட்இரண்டுமே வெள்ளை கலர் ஆப்ஷனில் மட்டுமே வருகின்றன. கூடுதலாக, AirPods 4 இப்போது வயர்லெஸ் சார்ஜிங் திறனையும் ஆதரிக்கிறது.
.