சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட பிரீமியம் QLED 4K டிவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது அதி சக்தி வாய்ந்த மற்றும் பிரபல PatchWall UI-ஐக் கொண்டுள்ளது.

சியோமி நிறுவனம் தனது புதிய X Pro QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் ஸ்மார்ட் டிவி போர்ட்ஃபோலியோவின் புதிய வரிசையை தொடங்கியிருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் டிவி இன்டர்பேஸ் மற்றும் ஆக்டா-கோர் ஆர்ம் கார்டெக்ஸ்-ஏ55 பிராசசரைக் கொண்டுள்ளது. 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் என மூன்று டிஸ்ப்ளே அளவுகளில் வரும் இந்த புதிய டிவிகள் மெல்லிய திரையுடனும் மற்றும் 4K ரெசொலூசனுடன் உருவாகியிருக்கிறது.

விளம்பரம்

இந்தியாவில் இதன் விலை என்ன?

இந்தியாவில் சியோமி X Pro QLED ஸ்மார்ட் டிவி 43 இன்ச் மாடல் ரூ.34,999 முதல் தொடங்குகிறது, அதே நேரத்தில் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ.49,999 மற்றும் ரூ.69,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் டிவியை இ-காமர்ஸ் தளங்கள், Mi ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

Xiaomi X Pro QLED 4K சிறப்பம்சங்கள்:

விளம்பரம்

இந்த புதிய ஸ்மார்ட் டிவி 4K டிஸ்ப்ளே மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடம், சியோமியின் தனித்துவமான விவிட் பிக்சர் எஞ்சின் 2 தொழில்நுட்பமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. 8ms ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் டால்பி விசனுடன், 43-இன்ச் மாடலின் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ 96.80% ஆகவும், அதே சமயம் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்கள் முறையே 97.20% மற்றும் 97.40% ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவைக் கொண்டுள்ளன.

மாலி ஜி52 எம்சி1, 2GB RAM மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் குவாட் கோர் கார்டெக்ஸ்-ஏ55 பிராசசசரும் அடங்கிய இந்த ஸ்மார்ட் டிவியின் மூன்று மாடல்களும் சியோமியின் சொந்த பேட்ச்வால் UI உடன் கூகுள் டிவியை இயக்கவும் வழி செய்கிறது.

விளம்பரம்

மேலும், இந்த புதிய தொலைக்காட்சியானது ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் காம்பன்சேஷன் (MEMC) தொழில்நுட்பம் மற்றும் eARC (Dolby Atmos Passthrough) ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியானது, டால்பி ஆடியோ, DTS:X மற்றும் DTS Virtual தொழில்நுட்பத்துடன் கூடிய 30W டூயல் ஸ்பீக்கர் யூனிட்டைக் கொண்டுள்ளது. புளூடூத் 5.0 மற்றும் Wi-Fi 802.11 ac/b/g/n, இரண்டு USB 2.0 போர்ட்கள் மற்றும் மூன்று HDMI போர்ட்கள் போன்ற ஆட் ஆன்ஸ் உடனும், கூகுள் குரோம்காஸ்ட், Miracast மற்றும் Google Assistant உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.

விளம்பரம்

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

இது தவிர, Xiaomi சமீபத்தில் தனது Redmi Watch 5 Active-ஐ ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் டியூரபிள் ஸ்டெயின்லெஸ் மெட்டல் ஜிங்க் அலாய் கேஸுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் IPX8 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்சுடன் ஜிங்க்-அலாய் மெட்டல் பாடியுடன் வந்துள்ளது. மேலும் இது 2-இன்ச் டிஸ்ப்ளேயுடன் 18 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி லைஃபை தரும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சானது நாய்ஸ் கேன்சலேசன் ஆதரவோடு மூன்று-மைக் செட்அப் மற்றும் ஸ்பீக்கருடன் சீரான புளூடூத் அழைப்புக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

.



Source link