ஆப்பிள் Glowtime நிகழ்வில் அந்நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. மேலும், இது எப்போது இந்தியாவில் கிடைக்கும் எனும் தகவலும் வெளியாகியுள்ளது.
உலக அளவில் செல்போன் விற்பனை பிரிவில் முன்னணி இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தனது ‘இட்ஸ் க்ளோ டைம்’ நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
இந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவனத்தின் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் வெளிவந்துள்ளன. ஐபோன் 16 ப்ரோ மாடல் 6.3-இன்ச் டிஸ்பிளே வசதியுடனும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.9-இன்ச் டிஸ்பிளே பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள் :
“மதுவுக்கு எதிரான மாநாடா? கூட்டணிக்கு எதிரான மாநாடா?” – திருமாவளவனுக்கு தமிழிசை கேள்வி
பிளாக் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம் மற்றும் புதிய டெசர்ட் டைட்டானியம் ஆகிய 4 நிறங்களில் ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் கிடைக்கின்றன. ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் 48எம்.பி ஃப்யூஷன் கேமராவைக் கொண்டுள்ளது, இது இப்போது டால்பி விஷனில் 4K வீடியோவைப் பதிவு செய்யக்கூடியது.
இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோ மாடல் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் விலையிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 900 ரூபாய் விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 13ஆம் தேதி இந்த புதிய ஐபோன்களை முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 20ஆம் தேதி இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச், ஏர் பட்ஸ், ஐஓஎஸ் 18 உள்ளிட்டவையும் வெளியிடப்பட்டது.
.