நாம் மனிதனின் உடலில் உள்ள வெப்பத்தைக் கண்டறிய தெர்மாமீட்டர் பயன்படுத்தி வெப்பநிலையைக் கண்டறிகின்றோம். அதேபோன்று நாம் வாழும் பூமிக்கும் தெர்மாமீட்டரை கண்டுபிடித்துள்ளனர் கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தினர்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தி நம்மால் அனைத்து விதமான விவசாய நிலத்தின் நிலையையும் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு அறிந்து நாம் பயிரிடுவதன் மூலம் அதிக பலன் கிடைக்கும். தெர்மா மீட்டர் மனிதன் உடலின் வெப்பநிலையைக் கண்டறிவது போல இந்த கருவி நிலத்தில் உள்ள ஈரப்பதத்தைக் கண்டறியும் வல்லமை கொண்டது.

விளம்பரம்

ஆகையால் நம் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள தாவரங்களுக்கு எப்பொழுது நீர் பாய்ச்ச வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். ஆகையால் நாம் பயன்படுத்தும் நீரின் அளவையும் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல் அதிக நீரினால் தாவரங்கள் வீணாவதையும் தவிர்க்கலாம். இந்த வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தைச் சேர்ந்த புத்திர பிரதாப் கூறுகையில், “இந்த கண்டுபிடிப்பின் பெயர் மண் ஈரப்பதம் காட்டி. இது கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடைய பணி என்னவென்றால் இது கைக்கு அடக்கமான ஒரு கருவி மிகவும் எளிதில் யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.

விளம்பரம்

இது கரும்புக்கு மட்டும் தான் என்றில்லை மற்ற எல்லாப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் என்று இந்திய அளவில் செயல் விளக்கம் செய்திருக்கிறார்கள். வயல்களிலும், வீட்டு தோட்டத்திற்கும் மற்றும் தொட்டிகளிலும் இதை பயன்படுத்த முடியும்.

இந்த மண் ஈரப்பதம் காட்டி கருவியைக் கண்டறிந்ததில் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மட்டுமில்லை, ஆரம்பத்திலிருந்து சிக்கல்கள், இடர்ப்பாடுகள் அனைத்தையும் கண்டறிவதிலிருந்து இந்தக் கருவி வெளி வரும் வரை உதவியாக இருந்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளின் பங்களிப்பு இருக்கிறது. அவர்கள் நிறைய அறிவுரை சொன்னார்கள்.

விளம்பரம்

இதையும் படிங்க: பள்ளியில் களைகட்டிய தேர்தல் திருவிழா… வாக்குச்சாவடி அமைத்து வாக்களித்த மாணவர்கள்…

ஏற்கனவே டேன்சியோ மீட்டர் என்கிற மானி இருந்தது. அதில் என்னென்ன குறைபாடுகள் இருந்தது என்று சொல்லி விவசாயிகள் எங்களிடம் கூறியதை வைத்துத் தான் நாங்கள் இந்தக் கருவியைக் கண்டுபிடித்தோம். கருவியில் 10 எல்இடி லைட் உள்ளது. சிவப்பு நிறம் முதல் ஊதா நிறம் வரை உள்ளது. அதில் எந்த நிற விளக்கு எரிகிறது என்று பார்த்து மண்ணில் எவ்வளவு ஈரப்பதம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்

இது தெர்மா மீட்டர் போன்று பயன்படுத்தக் கூடியது தான், இதை வயலிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு எப்பொழுது தேவைப்படுகிறதோ அதாவது நீர் எப்பொழுது பாய்ச்ச வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது அந்த இரண்டு ராடுகளையும் மண்ணில் பதித்து நீரின் ஈரப்பதத்தைக் கண்டறிந்து இப்பொழுது நீரை பாய்ச்சலாமா இல்லை ஒரு வாரத்துக்குப் பிறகு பாய்ச்சலாமா என்று அறிய பயனுடையதாக உள்ளது.

இந்த கருவியைப் பயன்படுத்தி ஆறு முறை தண்ணீர் கட்டுவதைக் குறைத்து இருக்கிறோம். கூடுதலாக 8 டன் மகசூலும் கிடைத்துள்ளது. இது தண்ணீரை மிச்சப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்திய அளவில் பல மாநிலங்களில் சப் சிடிஸ் ஸ்கீம்ஸ் கொடுத்திருக்கிறார்கள். 21 தொழில்துறை நிறுவனங்களுக்கு எங்களுடைய நிறுவனம் மேனுஃபேக்சர் பண்ணும் அனுமதி கொடுத்துள்ளது. இந்த கருவியின் விலை ரூ.1,500 – ரூ.1,600 தான். இந்தக் குறைந்த விலையில் மண்ணின் ஈரப்பதத்தைக் கண்டறிவதன் மூலம் நீர் பயன்பாடு குறைகிறது, மகசூலும் அதிகரிக்கிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: TNPSC Group 2 Exam: தேர்வர்கள் செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை என்ன…

இந்த கருவி எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கருவி, இது கைக்கு அடக்கமான அளவில் இருக்கும். இது பெரும்பாலும் நீரை சிக்கனப்படுத்தும் முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாகக் கரும்பு விவசாயத்தில். கடந்த 2019 ஆண்டு மத்திய அரசின் ஜல் சக்தி நீர்வளத்துறை அமைச்சகம் இந்த கருவிக்குக் கொடுத்துக் கௌரவித்தார்கள். நீரை சிக்கனமாக பயன்படுத்த உதவும் இந்த கருவியைக் கௌரவப்படுத்தும் வகையில் 2021ஆம் ஆண்டில் ஐநா சபையின் நோபிலிட்டி அவார்ட்ஸ் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.



Source link