அமேஸ்பிட் நிறுவனமானது GTR ஸ்மார்ட்வாட்ச் சீரிஸில் GTR 4 எனப்படும் புதிய ஸ்மார்ட்வாட்சை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேடட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஹை-டெபினிஷன் AMOLED டிஸ்ப்ளே உடன் வழங்குகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், 12 நாட்கள் பேட்டரி ஆயுள், ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்களுடன் வழங்குகிறது.
அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச்: விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்
புதிய அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் ரூ.16,999 விலையில் கிடைக்கிறது. இது சிலிகான் லெதர் ஸ்ட்ராப் கொண்ட கேலக்ஸி பிளாக் மற்றும் பிரவுன் லெதர் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வருகிறது. இந்த புதிய ஜிடிஆர் 4 ஸ்மார்ட்வாட்ச் அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச்: விவரக்குறிப்புகள்
அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.45 இன்ச் HD AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது Zepp OS 2.0 மூலம் இயங்குகிறது. மேலும், இது பில்ட்-இன் அமேசான் அலெக்சா மற்றும் ஆஃப்லைன் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆதரவுடன் வருகிறது. அமேஸ்பிட் GTR 4 ஆனது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்காக பீக்பீட்ஸ் ஒர்க்அவுட் ஸ்டேட்டஸ் அல்கோரிதம் உடன் வருகிறது. இதில் அதிகபட்சமாக பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், மேம்பட்ட பிட்னஸ் அம்சங்கள் மற்றும் செப் ஆப் மூலம் கூடுதல் வசதிகள் உள்ளன.
GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் போன்ற 8 ஆக்டிவிட்டிகளை ஸ்மார்ட் ரெககனைஷன் செய்து கொள்ளக் கூடியது. இதுபோக ஸ்ட்ரென்த் டிரெய்னிங், கோல்ப் ஸ்விங் மற்றும் ரன்னிங்கின் போது, லேன்-அக்கியூரெட் டிராக் ரன் மோட் போன்ற பீச்சர்களையும் கொண்டுள்ளது.
இதில் 2.3 ஜிபி மெமரி ஆதரவுடன் வருகிறது, மேலும் இதில் இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த டிவைஸ் ஆனது 5 ஏடிஎம் நீர் எதிர்ப்பைக் கொண்டுள்ளது மற்றும் யூசர்களின் தூக்கம் மற்றும் ஓய்வைக் கண்காணிக்க Zepp Aura டெக்னாலஜியை வழங்குகிறது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
பிளட் ஆக்ஸிஜன் லெவல் மற்றும் ஹார்ட்ரேட் போன்றவற்றை கண்காணிக்க உதவும் BioTracker 4.0, SpO2 சென்சார் உடன் வருகிறது. மேலும், இதில் புளூடூத் காலிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 4 ஸ்மார்ட்வாட்ச்சில் 475mAh பேட்டரி உடன் வருகிறது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது.
.