HP நிறுவனம் மாணவர்களை இலக்காக கொண்டு Victus என்கிற ஸ்பெஷல் எடிஷன் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னவென்பதை இங்கே பார்க்கலாம்.
HP நிறுவனம் மாணவர்களை குறிவைத்து Victus என்கிற ஸ்பெஷல் எடிஷன் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் சமீபத்திய 12th Gen Intel Core பிராசசர் மற்றும் NVIDIA GeForce RTX 3050A GPUகள் இடம்பெற்றுள்ளன. ரூ.65,999 விலையில் விற்பனைக்கு வரும் இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பேக்லிட் கீபோர்டு ஆகியவை அடங்கும்.
HP ஆனது அதன் புதிய விக்டஸ் ஸ்பெஷல் எடிஷன் லேப்டாப்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது அடுத்த வெர்ஷனை விரிவுபடுத்தியுள்ளது. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த லேப்டாப்புகளில் NVIDIA GeForce RTX 3050A GPUகள் 4ஜிபி லேப்டாப் ஜிபியுக்கள் இடம்பெற்றுள்ளன. பிசிக்களில் 12th Gen Intel Core பிராசசரும் இடம்பெற்றுள்ளதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதன் விலை என்ன?
HP Victus ஸ்பெஷல் எடிஷன் லேப்டாப், HP வேர்ல்ட் ஸ்டோர்ஸ், HP ஆன்லைன் ஸ்டோர்ஸ் மற்றும் மல்டி பிராண்ட் அவுட்லெட்டுகளில் ரூ.65,999 அல்லது ரூ.3,999 ஆரம்ப விலையில் மாதந்தோறும் ஈஎம்ஐ-யில் அட்மாஸ்பெரிக் ப்ளூ நிறத்தில் கிடைக்கிறது.
HP World Stores, HP Online-ல் மற்றும் பல பிராண்ட் விற்பனை நிலையங்களில் HP Victus ஸ்பெஷல் எடிஷன் லேப்டாப்களை வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 499க்கு ரூ.6097/- மதிப்புள்ள HyperX Cloud Stinger 2 ஹெட்செட்டை வாங்கிக் கொள்ளலாம்.
HP Victus ஸ்பெஷல் எடிஷன் லேப்டாப் அம்சங்கள்:
HP Victus ஸ்பெஷல் எடிஷன் லேப்டாப் 12 Gen Intel கோர் பிராசசர் மற்றும் NVIDIA GeForce RTX 3050 A 4GB லேப்டாப் GPUகளுடன் வருகின்றன. இந்த லேப்டாப் 15.6-இன்ச் hldisplat மற்றும் NVIDIA GeForce RTX 3050 A 4GB லேப்டாப் GPU மற்றும் 16 GB வரையிலான சிஸ்டம் ரேம் ஆகியவை மென்மையான செயல்திறனை வழங்கும். FHD டிஸ்ப்ளே 144Hz ரெப்ரெஷ் ரேட் 7ms ரெஸ்பான்ஸ் டைமுடன் நிஜ வாழ்க்கை காட்சிகளுக்கு ஏற்ப இருக்கும் என்கின்றனர்.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
2.29 கிலோ எடையுள்ள புதிய ஹெச்பி விக்டஸ் முழு அளவிலான, பேக்லிட் கீபோர்டுடன், 70WHR பேட்டரி பேக்கப் மூலம், லேப்டாப் நீண்ட கால பேட்டரி ஆயுளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “மாணவர்களுக்கு புதுமையான, மேம்பட்ட கணினி கருவிகள் தேவை, அவற்றின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் அதே வேளையில் கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான சிறப்பை அதிகரிக்க முடியும். இந்த HP Victus லேப்டாப்க்குள் இருக்கும் AI டென்சர் கோர்கள் கொண்ட பிரத்யேக NVIDIA GPUகள், வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான சாத்தியக்கூறுகளுக்கு வழி செய்கிறது. மேலும் எதிர்காலத்தை வடிவமைக்க இந்திய மாணவர்களுக்கு இதுபோன்ற லேப்டாப்கள் உதவும் என்று NVIDIA, Asia-South நிர்வாக இயக்குநர் விஷால் துபர் கூறினார்.
.