ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் சீரிஸை (ஐபோன் 16 சீரிஸ்) இன்று அறிமுகம் செய்ய உள்ள நிலையில், ஆப்பிள் ரசிகர்கள் தற்போது விற்பனையில் உள்ள ஐபோன் மாடல்களில் கணிசமான தள்ளுபடி பெறும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 சீரிஸை சேர்ந்த மொபைல்கள் தற்போது அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14-ன் சமீபத்திய ஆஃபர் விலைகளை இங்கே காணலாம்.

விளம்பரம்

iPhone 15-க்கு வழங்கப்படும் பெரிய தள்ளுபடிகள்:

முதலில் ரூ.79,600-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 இப்போது ரூ.69,999-க்கு விற்கப்படுகிறது, இதனை வாங்க நினைப்பவர்களுக்கு தற்போது ரூ.9,601 ஃபிளாட் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. கூடுதலாக இந்த மொபைலை வாங்குவோருக்கு சில பேங்க் ஆஃபர்கள் உள்ளன, இவை iPhone 15-ன் விலையை மேலும் குறைக்கலாம். Amazon மற்றும் Flipkart இரண்டிலும் விலை குறைந்திருப்பதை காணலாம்.

iPhone 14-க்கு இன்னும் மிகப்பெரிய தள்ளுபடி:

நீங்கள் 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் 14 மொபைலை வாங்க நினைத்தால் இன்னும் அதிக தள்ளுபடியை பெறலாம். ஐபோன் 14 மொபைலின் ஒரிஜனல் அறிமுக விலையான ரூ.69,600 ஆகும். தற்போது இந்த மொபைலின் விலை ரூ.57,999-ஆக உள்ளது. இதன் மூலம் அசல் விலையில் இருந்து அசல் நுகர்வோருக்கு ரூ.11,601 பிளாட் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. iPhone 15-ஐ போலவே ஏற்கனவே அளிக்கப்படும் தள்ளுபடி விலை தவிர, கூடுதல் வங்கிச் சலுகை மூலம் பயனடையலாம். Flipkart இந்த தள்ளுபடி சலுகையை வங்கி சார்ந்த சலுகைகளுடன் சேர்த்து வழங்குகிறது, இது விலையை மேலும் குறைக்க கூடும். அதிக பணம் செலவழிக்காமல் ஹை-என்ட் ஐபோன் எக்ஸ்பீரியன்ஸை பெற விரும்புவோருக்கு இந்த சலுகைகள் சரியாக இருக்கும்.

விளம்பரம்

Also Read |
உலகின் மிகப் பிரபலமான ஸ்மார்ட்போன் எது தெரியுமா? அறிக்கை சொல்லும் தகவல்கள்!

iPhone 16 வெளியீட்டிற்கு முன்னதாக iPhone 15, iPhone 14 மாடல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுவது ஏன்?

பழைய மாடல் ஐபோன்கள் மீதான விலை குறைப்பு என்பது ஐபோன் 16 வெளியீட்டிற்கு முன்னதாக பழைய ஸ்டாக்ஸ்களை விற்று தீர்ப்பதற்கான ஒரு உத்தியாக இருக்கலாம். எனினும் ஐபோன் 16 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு மேற்கண்ட இந்த ஐபோன் மொபைல்களின் விலை இன்னும் குறைய அதிக வாய்ப்பு இருப்பதால் மேலும் சில நாட்கள் காத்திருப்பது நல்லது என்பது பரவலான கருத்தாக உள்ளது. ஆப்பிள் தனது 2024 ஃபிளாக்ஷிப் ஐபோன்களை செப்டம்பர் 9, திங்கட்கிழமை (இன்று) க்ளோடைம் ஈவன்ட்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஈவன்ட் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகமான ஆப்பிள் பார்க்கில் நடைபெற உள்ளது.

விளம்பரம்

.



Source link