லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பின் ஏவுகணை படைத்தளபதி வான் வெளி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் நார்த்தன் ஆரோஸ்(Operation Northern Arrows) என்ற பெயரில் லெபனான் நாட்டில் உள்ள ஹெஸ்பொல்லாஅமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில், 492 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் ஏவுகணை மற்றும் ராக்கெட் பிரிவின் படைத்தளபதி இப்ராஹிம் முகமது கபிசி உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும், ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த தலைவரான அலி கராக்கியை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதாவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஹெஸ்பொல்லா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதனிடையே, இஸ்ரேலின் ஹைஃபா நகர் மீது ஹெஸ்பொல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவத்தினர் வானிலேயே தடுத்து அழித்தனர்.

விளம்பரம்

2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேல் – ஹெஸ்பொல்லா இடையே பெரிய அளவில் மோதல் நடைபெற்று வருவதால், லெபனானின் தென் பகுதியில் உள்ள மக்கள் நாட்டின் மற்ற இடங்களுக்கு சாரை சாரையாக புலம் பெயர்ந்து வருகின்றனர்.

விளம்பரம்

.





Source link