சென்னையில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 10 ஓவர்களுக்குள் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி தலா 6 ரன்களும், சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

விளம்பரம்

ஆறுதலாக ஜெய்ஸ்வால் – ரிஷப் பந்த் இணை அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றது. இருவரும் நிதானமாக விளையாடினர். உணவு இடைவேளைக்கு முன்பு வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்களை சேர்த்தது.

உணவு இடைவேளைக்கு பின் 39 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பந்தும் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட் சரிவுகள் இருந்தாலும், ஜெய்ஸ்வால் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை கரை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Also Read |
ப்ளாஷ்பேக்… 2007ஆம் ஆண்டு இதே நாளில்… பிளின்டாஃபுக்கு தரமான பதிலடி கொடுத்த யுவராஜ் சிங்!

விளம்பரம்

ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அவருக்கு துணையாக கே.எல். ராகுல் 10 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.

இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் அந்த நான்கு விக்கெட்டுகளையும் வங்கதேச வீரர் ஹசன் மஹ்முத் ஒற்றை வீரராக கைப்பற்றி அசத்தினார்.

இந்தியாவின் முன்னணி வீரர்களை தனது பந்துவீச்சால் தடுமாறச் செய்த ஹசன் மஹ்முத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

.



Source link