பானிபூரி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது. எந்த உணவாக இருந்தாலும் அளவாக உண்ணுதல் மற்றும் சில சிற்றுண்டி உணவுகள் சுகாதாரமான முறையில் தான் தயாராகிறதா? என்பதை பார்த்து உண்பதும் அவசியம். அதில் பானிபூரி மேல் பல விமர்சனங்கள் இருக்கிறது. அந்தக் குழப்பத்தை போக்க‌ இந்த வழி சற்று வித்தியாசமாக இருக்கும் என தஞ்சை முனிசிபல் காலனியைச் சேர்ந்த ஹரி ராமகிருஷ்ணன் பானி பூரி கடைக்காக வித்தியாசமான சென்சார் மெஷினை வடிவமைத்துள்ளார்.

விளம்பரம்

அதாவது பூரியில் நிரப்பப்படும் பலவித பிலேவர் வகை தண்ணீரை வெவ்வேறு குவளைகளில் ஊற்றி வைத்து அதிலிருந்து கம்பரசர் பைப் கனெக்சன் எடுத்து நேரடியாக குழாயில் தண்ணீர் வருவது போல் அந்த பூரியை குழாய் டியூப் முன்பு கொண்டு சென்று அது சென்சார் செய்து அதற்கு தேவையான நீரை சரியாக ஊற்றுகிறது. இது போன்ற மெஷின் மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் விற்பனையில் இருக்கும் நிலையில். குறைந்த செலவில் அதற்கு தேவையான மின் உதிரிப் பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு இவரே இந்த சென்சார் மிஷினை வடிவமைத்துள்ளார். தற்போது இந்த சென்சார் பானிபூரி கடை குட்டி சைக்கிள் வகையில் அமைந்துள்ளது.

விளம்பரம்

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கடந்த 12 ஆண்டுகளாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வந்தேன். தற்போது ஒரு வருடமாக சிற்றுண்டி கடையை நடத்தி வருகிறேன். பானி பூரி கடையை கொஞ்சம் வித்தியாசமாகவும், நல்ல தரத்திலும் தரவேண்டும் என்று எண்ணினேன். அப்போதுதான் பல வித ஃப்ளேவர்களில் பாணியை தரலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான இயந்திரத்தை தேடிய போது ரூ.1-1.50 அச்சம் வரையில் மார்கெட்டில் இருந்தது. இதையே நாமலே நமக்கு பிடித்தது போல மாற்றி அமைக்க கூடாது என, அதற்கான உதிரி பொருட்களை மட்டும் மார்க்கெட்டில் வாங்கி எனக்கு பிடித்தவாறு நான்கு பிளேவர்களுக்கு சென்சார் குழாய்களை அமைத்துள்ளேன்”.

விளம்பரம்

“மேலும், ஒரு முறை தயாரிக்கப்படும் பாணியை மறுநாள் பயன்படுத்துவதில்லை. அதேபோல குழாய்களையும் தினமும் தூய்மையாக வைத்துக் கொள்கிறேன். இதன் மூலம் நல்ல பாணி பூரியை மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன் என்று நம்புகிறேன். முக்கியமாக இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் இதுபோன்ற முறையில் பானி பூரி சாப்பிட்டு உற்சாகமடைகின்றனர்”  என்று கூறினார்.

.

  • First Published :



Source link