ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய அதாவது ஃபோல்டபில் ஐபோனை 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் போல்டபில் ஸ்மார்ட் ஃபோன் மார்க்கெட்டில் ஆப்பிள் நிறுவனமும் நுழைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், அந்த நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை நோக்கி நகர்வதை வெளிப்படுத்துகிறது. ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கையானது ஃபோல்டபில் ஸ்மார்ட் ஃபோன் தொழில்துறையை மறுவடிவமைக்கும் ஆற்றலை கொண்டிருக்கும். ஏனென்றால் இந்த செக்மென்ட்டில் ஆப்பிளின் நுழைவானது மடிக்கக்கூடிய டிவைஸ்களில் புதுமை மற்றும் தரத்திற்கான புதிய தரநிலைகளை அமைக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
ஃபோல்டபில் ஸ்மார்ட்ஃபோன் மார்க்கெட்டானது கடந்த சில ஆண்டுகளாக சாம்சங், Huawei மற்றும் மோட்டோரோலா போன்ற நிறுவனங்களால் நிலையான வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனம் அதன் Galaxy Z சீரிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் ஒருங்கிணைப்புக்கான சிறந்த அணுகுமுறைக்கு பெயர் போனது என்பதால் ஃபோல்டபில் டிவைஸ் செக்மென்ட்டில் மேலும் பல புதுமையை புகுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே DSCC-ன் புதிய அறிக்கையானது ஃபோல்டபில் ஸ்மார்ட்ஃபோன்கள் மார்க்கெட்டில் இருக்கும் போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த பிரிவில் சில சரிவுகள் இருந்தாலும் நம்பிக்கையாக இருக்க ஒரு காரணமாக வரவிருக்கும் ஆப்பிளின் ஃபோல்டபில் ஐபோனை காரணமாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது. ” 2019-2023 வரை ஆண்டுக்கு குறைந்தது 40% வளர்ச்சியை கண்ட பிறகு, DSCC இப்போது ஃபோல்டபில் ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளே மார்க்கெட்டானது 2024-ல் 5 சதவீதம் உயர்வையும், அதே சமயம் வரும் 2025-ல் 4 சதவீத சரிவையும் சந்திக்கும்” என்று நம்புவதாக அறிக்கை கூறுகிறது. ஃபோல்டபில் ஸ்மார்ட்ஃபோன் டிஸ்ப்ளே கொள்முதல் Q3’24 இல் 38 சதவீதம் Y/Y குறைந்துள்ளது மற்றும் அடுத்த ஐந்து காலாண்டுகளில் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read:
வாட்ஸ்அப் மூலம் திருமண அழைப்பு…. பத்திரிகை அனுப்பி அரங்கேற்றப்படும் ஆன்லைன் மோசடி!
இதற்கிடையே வரவிருக்கும் ஃபோல்டபில் ஐபோன் கட்டிங்-எட்ஜ் டெக்னலாஜியை கொண்டிருக்கும். இதில் நூற்றுக்கணக்கான ஃபோல்ட்ஸ்களை தாங்க கூடிய ஃபிளக்ஸிபிள் OLED டிஸ்ப்ளேவும் அடங்கும். அதேபோல வரவிருக்கும் ஆப்பிளின் இந்த டிவைஸ் ஒரு தனித்துவமான வடிவமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது வலுவான செயல்திறன் கொண்ட சிப்செட், உயர்தர கேமராக்கள் மற்றும் பிரீமியம் உணர்வை அளிக்கும் நேர்த்தியான வடிவமைப்பு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஆப்பிளின் iOS-ஆல் சப்போர்ட் செய்யப்படும்.
இது iCloud, Apple Music மற்றும் Apple Pay போன்ற பிற ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பயன்படுத்த யூஸர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குகிறது. ஆப்பிளின் ஃபோல்டபில் ஐபோன் வெளியிடப்பட்டால், அது இந்த செக்மென்ட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் ஃபோல்டபில் மொபைல் மார்க்கெட் ஏற்கனவே உச்சத்தை எட்டியிருந்தால், மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிரிவில் சில சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
.