டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்றைய விலை மக்களுக்கு சற்று சோகத்தையே கொடுத்துள்ளது.
நேற்று (04.12.2024) தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,130-க்கும், ஒரு சவரன் ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (05.12.2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.7,140-க்கும், ஒரு சவரன் ரூ. 80 அதிகரித்து, ரூ.57,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க:
தங்கம் வாங்கப் போறீங்களா? இந்த முக்கியமான விபரங்களை கவனத்தில் வச்சுக்கோங்க…
இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,895-க்கும், ஒரு சவரன் ரூ.47,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ. 1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி, ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கு விற்பனையாகிறது.
.