மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் புதிதாக Moto G55 மற்றும் Moto G35 ஆகிய இரண்டு புதிய மிட்-செக்மென்ட் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல்களின் விலை ரூ.19,000 முதல் ரூ.24,000 வரை இருக்கிறது.
இந்த 2 ஸ்மார்ட் போன்களின் ஸ்பெசிஃபிகேஷன்களும் பெரும்பாலும் ஒரே மாதிரி இருந்தாலும், இதில் Moto G55 மொபைலின் சில ஸ்பெசிஃபிகேஷன்கள் சற்று சிறப்பாக உள்ளன. எனவே தான் மோட்டோ ஜி35 மொபைலை விட மோட்டோ ஜி 55 விலை சற்று அதிகமானது. மோட்டோரோலாவின் இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
Moto G55 மற்றும் Moto G35 விலை விவரங்கள்:
ஐரோப்பிய மார்க்கெட்டில் Moto G55 மொபைல் 249 யூரோ என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக இது ரூ.24,000 ஆகும். அதே நேரம் Moto G35 மொபைலின் விலை 199 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,500-ஆக உள்ளது. இந்த 2 மொபைல்களும் சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஃபாரஸ்ட் கிரே, ஸ்மோக்கி கிரீன் மற்றும் ட்விலைட் பர்பிள் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் Moto G55 மேப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் லீஃப் கிரீன், குவா ரெட், மிட்நைட் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் உள்ளிட்ட 4 கலர் ஆப்ஷன்களில் Moto G35 மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Moto G55 மற்றும் Moto G35 மொபைல்களின் அம்சங்கள்:
6.49-இன்ச் ஃபுல் HD+ LCD டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை Moto G55 மொபைல் கொண்டுள்ளது. இந்த மொபைலின் டிஸ்ப்ளேவானது 405ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது. மறுபுறம் மலிவு விலை மாடலான Moto G35 மொபைல் 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 1,000nits பீக் பிரைட்னஸுடன் கூடிய பெரிய 6.7-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
Moto G55 மொபைலில் MediaTek Dimensity 7025 ப்ராசஸர் உள்ளது இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியே 1TB வரை விரிவாக்கி கொள்ளலாம். அதே நேரம் Moto G35 மொபைலானது Unisoc T760 ப்ராசஸரில் இயங்கும் அதே நேரம் மேற்கண்ட அதே ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷனை கொண்டுள்ளது.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
Moto G55 மொபைலின் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 8MP செகன்டரி சென்சார் அடக்கம். செல்ஃபிக்களுக்காக இதன் முன்பக்கத்தில் 16MP கேமரா உள்ளது. Moto G35 மொபைலானது மேலே நாம் பார்த்த அதே கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. ஆனால் இதில் உள்ள பிரைமரி கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை (OIS) சப்போர்ட் செய்யாது. இரண்டு மொபைல்களிலும் 5,000mAh உள்ளது, ஆனால் Moto G55 மொபைலானது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. அதே நேரம் Moto G35 மொபைலானது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இரண்டு மொபைல்களிலும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் Dolby Atmos சப்போர்ட்டுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளன. அதே போல மேலே நாம் பார்த்த இரண்டு மொபைல்களின் டிசைனும் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Moto G45 மற்றும் Moto G85 போன்றே உள்ளது குறிப்பிடத்தக்கது.
.