நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது. அல்லு அர்ஜூனின் காமெடி கலந்த ஆக்சன் காட்சிகளை ரசித்த ரசிகர்கள் படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில் புஷ்பாவின் 2ஆம் பாகம் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இன்று புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தின் கதையைப் பொருத்தவரை அதே செம்மரக்கடத்தல் கதை தான். போலீஸ் அதிகாரியான பகத் பாசிலுக்கும், அல்லு அர்ஜுனுக்கும் இடையேயான ஈகோ சண்டை தான் படத்தை நகர்த்தியுள்ளது. படத்தின் நீளம் அதிகமாக உள்ள நிலையில் அதை மட்டும் சற்று கவனித்திருக்கலாம் என படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகரில் ராஜலட்சுமி மற்றும் ரிட்சி ஶ்ரீராம் திரையரங்குகளில் முதல் காட்சியாகக் காலை 10.30 மணிக்கு படம் திரையிடப்பட்ட நிலையில், வேறு மொழிப் படம், விடுமுறை நாள் இல்லை போன்ற காரணங்களால் படத்திற்கான கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
கூட்டம் குறைவாக இருந்தாலும் படம் பார்த்த ரசிகர்கள் பாஸிட்டிவ் விமர்சனங்களைத் தந்தனர். பாகம் இரண்டு பாகம் ஒன்றை விட மாஸாக இருப்பதாகவும், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் இருவரும் நன்றாக நடித்துள்ளனர் என கருத்து தெரிவித்தனர். வார நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தாலும் வார இறுதி நாட்களில் புஷ்பா 2 படத்திற்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.