சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த ‘புஷ்பா-2’ திரைப்படம், நேற்று முன் தினம் இரவு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. அதன்படி, ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி, ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.

விளம்பரம்

இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக திரையரங்க நிர்வாகம் மற்றும் முன்னறிவிப்பின்றி திரையரங்கிற்கு வந்த அல்லு அர்ஜுன் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்தது.

இந்த நிலையில், தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் நிதி உதவி அறிவித்துள்ளார். ‘புஷ்பா 2’ படத்தை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி அளிப்பதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

சந்தியா திரையரங்கில் நடந்த மரணம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நடிகர் அல்லு அர்ஜுன், பெண்ணின் மரணத்தை அறிந்து தங்கள் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாகவும், வருத்தமடைந்ததாகவும் கூறினார். துயரமான இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை நிற்பதாகவும் அல்லு அர்ஜுன் உருக்கமாக பேசினார்.

விளம்பரம்

திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களும், பொதுமக்களும் படத்தை பார்த்து ரசித்து பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் அல்லு அர்ஜுன் கேட்டுக்கொண்டுள்ளார்.

.





Source link