சீனாவில் மகாராஜா திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு என்பது குறித்த முழு விவரம் இங்கே..
குரங்கு பொம்மை புகழ் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் தான் ‘மகாராஜா’. இதில், விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், இந்த படம் ஓடிடியில் வெளியாகி அதிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியான திரைப்படங்களில் ‘மகாராஜா’ படம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இந்த படம் சுமார் ரூ.110 கோடி வசூல் சாதனை படைத்தது. இதற்கிடையே, மகாராஜா திரைப்படம் சீனாவில் 40,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது. பிரிமியர் காட்சியில் ரூ. 1.09 கோடியும், 2வது நாள் ரூ.1.26 கோடியும் வசூலித்த ‘மகாராஜா’ திரைப்படம், 2 நாள் வசூலில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.2.35 கோடி வசூலித்தது.
இதையும் படிங்க:
‘இந்த ஒரு சாதனையை மட்டும் புஷ்பா 2 முறியடிக்கமுடியவில்லை’ அது என்ன தெரியுமா?
தற்போது வரை ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ. 40 கோடிக்கும் மேல் ‘மகாராஜா’ திரைப்படம் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், உலகளவில் படம் ரூ. 150 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.