2024-ஆம் ஆண்டின் இறுதியில் நாம் இருக்கும் நிலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்காக iQOO நிறுவனம் சமீபத்தில் iQOO 13 என்ற மற்றொரு ஃபிளாக்ஷிப் டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய iQOO ஃபோன் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டை கொண்டுள்ளது.

மேலும் இந்த மொபைலின் பின்புறம் மூன்று 50-மெகாபிக்சல் பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த டிவைஸ் விவோவின் ஃபன்டச் ஓஎஸ் 15 ஸ்கின் உடன் ஆண்ட்ராய்டு 15-ல் இயங்குகிறது.

விளம்பரம்

இந்தியாவில் iQOO 13 மொபைலின் விலை:

iQOO 13 மொபைலானது 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் இரண்டு வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.54,999 மற்றும் ரூ.59,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் வரும் டிசம்பர் 11 முதல் நாட்டில் விற்பனைக்கு வர உள்ளது.

iQOO 13 மொபைலின் அம்சங்கள்:

iQOO 13 மொபைலானது 144Hz ரெஃப்ரஷ் ரேட், 6.82-இன்ச் 2K ரெசல்யூஷன் LTPO AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைலின் பின்புறத்தில் இருக்கும் கேமரா மாட்யூலை சுற்றி RGB LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைல் 8.1 மிமீ தடிமன் மற்றும் 213 கிராம் எடை கொண்டது. இந்த ஃபோன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி சேமிப்பகத்துடன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஃபோனில் Q2 சிப்செட் உள்ளது, இது மேம்பட்ட கேமிங் செயல்திறனை யூஸர்களுக்கு வழங்குகிறது.

விளம்பரம்
இறைச்சியை விட அதிக புரதம் கொண்ட 9 விதைகள்.!


இறைச்சியை விட அதிக புரதம் கொண்ட 9 விதைகள்.!

முன்பே குறிப்பிட்டபடி iQOO 13 மொபைலானது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Funtouch OS 15 வெர்ஷனில் இயங்குகிறது. இந்த மொபைலுக்கு நான்கு OS அப்கிரேட்ஸ் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. புதிய வெர்ஷனில் எரேஸ், லைவ் கட்அவுட், ஜெமினி சப்போர்ட் மற்றும் சர்க்கிள் போன்ற AI அம்சங்களும் உள்ளன.

கேமராவை பொறுத்த வரை புதிய iQOO 13 மொபைலானது OIS சப்போர்ட்டுடன் கூடிய 50MP பிரைமரி சென்சார், 50MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் OIS சப்போர்ட்டுடன் கூடிய 50MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த மொபைல் 32MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைல் 120W வயர்டு சார்ஜிங் ஸ்பீட்டிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. iQOO 13 மொபைலில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்க்ளில் 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB 3.2 போன்றவை அடங்கும்.

விளம்பரம்

.



Source link