சினிமா ஒரு பக்கம், கார் ரேஸிங் ஒரு பக்கம் என பிசியான திரை பிரபலமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் படங்கள் எதுவும், கடந்த 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை. இதையடுத்து, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது ஒரே தேதியில் இவரின் இரு படங்கள் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் குமார் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் விடாமுயற்சி. லைகா இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்திருக்கும் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் இருந்து வந்தது. தற்போது விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீசரை பார்க்கும்போது இப்படம் ஹாலிவுட் திரைப்படமான breaking bad படத்தின் ரீமேக் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதலில் அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்பட்டது. குட் பேட் அக்லி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு வெளியாவதால் அஜித் ரசிகர்கள் இரு படங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

  • First Published :



Source link