யாழில் பரவி வரும் அடையாளம் காணப்படாத நோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து, 7 உயிர்களைப் பலிகொண்ட காய்ச்சலானது எலிக்காய்ச்சல் (Leptospirosis) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு பரவிய எலிக்காய்ச்சல் தொடர்பில் நேற்று (11) செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியர் சத்தியமூர்த்தி, காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் உயிரிழந்தவர்கள் 20 – 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எலிக்காய்ச்சல் நோய் என சந்தேகிக்கப்படுவதால், நோயறிதலை உறுதிப்படுத்துவதற்காக இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, குருதி மாதிரிகளை பரிசோதித்த பின்னர் இது எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.





Source link