01
2000 ஆண்டு வெளியான “பைலட்ஸ்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். இதன் பின்னர் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான “இது என்ன மாயம்” என்ற தமிழ் திரைப்படம் நடிகையாக அறிமுகத்தை கொடுத்தது. இதன் பின்னர் “பைரவா”, “ரஜினி முருகன்”, “மகாநதி”, “சர்கார்”, “அண்ணாத்த” உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சில படங்களிலும் கீர்த்தி சுரேஷ் இடம் பெற்றிருந்தார்.