15
சீன அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய அடிப்படையிலான வலை தொகுதிகள் புதன் கிழமை (11) மன்னாரில் சிலாவத்துறை பிரிவு கொக்குபடையான் மீனவர்களுக்கு மன்னார் கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் கலிஸ்ரனால் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஏனைய கிராம பகுதி மீனவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட இருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தலா ஒவ்வொரு படகுக்கும் ஆறு பீஸ் கொண்ட வலைத் தொகுதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மன்னார் மாவட்டத்தில் 2310 மீனவ படகுகளின் மீனவர்கள் நன்மை அடைவதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
(தலைமன்னார் விஷேட நிருபர்)