ஜெயிலர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம், “கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். தனது வித்தியாசமான மேக்கிங்கால் ரசிகர்களின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். இதனால் அவரும் ரஜினிகாந்த் இணையும் “கூலி” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் “கூலி” படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பை டீசர் வாயிலாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில், “தங்கமகன்” படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடல் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகைகள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பையும் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்து ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. “கூலி” படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், உபேந்திர ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விளம்பரம்

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இன்று ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் ரஜினி உடைய வீடியோக்கள் அதிகம் காணப்படுகிறது. மேலும் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக “கூலி” படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் சிறு பகுதியை படக்குழு சன் பிக்சர்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

TR ராஜேந்திரனின் ஹம்மிங்கில் உருவாகியுள்ள இந்த பாடலின் இசை மற்றும் ரஜினி அசத்தலான மாஸ் நடனம் ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெய்பூரில் நடைபெற்று வரும் “கூலி” படப்பிடிப்பில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். குழுவினர் பிறந்தநாள் பாடல் பாட ரஜினிகாந்த் கேக் வெட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விளம்பரம்

.





Source link