நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், குரங்குகளை மலட்டுத்தன்மையாக்கும் முன்னோடித் திட்டம் மாத்தளை, இஹல ஹரஸ்கம பகுதியில் இன்று (12) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முன்னோடித் திட்டத்திற்கு அரசாங்கம் 4.5 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளள்ளதுடன், இத்திட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் பொறிக் கூண்டுகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட குரங்குகளை (பெண்/ஆண்) கிரித்தலை விலங்குகள் நல மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவற்றை மலட்டுத் தன்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு மீண்டும் உரிய இடத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் பியன்வல, மாத்தளை மாவட்ட செயலாளர் திருமதி தேஜானி திலகரத்ன, மாத்தளை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் அஜித்தா மாணிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

குரங்குகள் விவசாய விளைநிலங்களுக்குள் நுழைந்து பெரும் சேதத்தை விளைவித்து வருவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த நடடிவக்கை எடுக்குமாறும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததோடு, இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 www.instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK

The post குரங்குகளை கட்டுப்படுத்த மலடாக்கும் முன்னோடித் திட்டம் appeared first on Thinakaran.





Source link