புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடித்த உள்ள படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்துடைய ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களுக்காக சுமார் 5 ஆண்டுகள் அல்லு அர்ஜுன் வேறு எந்த படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவ்விரு படங்களும் மிகப்பெரும் வெற்றியை பெற்று தந்துள்ளன. குறிப்பாக இரண்டாவது பாகம் வெளியான முதல் 6 நாட்களில் மட்டும் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளது.

விளம்பரம்

இந்நிலையில் அடுத்ததாக அல்லு அர்ஜூன் எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்தபடி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் திரி விக்ரம் இயக்க உள்ள படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து ஜூலாய், சன் ஆப் சத்யமூர்த்தி, ஆல வைகுண்டபுரம்லோ ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். திரி விக்ரம் இயக்க உள்ள அடுத்த திரைப்படம் பான் இந்தியா படமாக புஷ்பாவை போன்று அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

இதையும் படிங்க – Vijay | கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்வில் பங்கேற்ற நடிகர் விஜய்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். “ரசிகர்களின் கற்பனைக்கு எட்டாத வகையில் அல்லு அர்ஜுன் திரி விக்ரம் இணையம் படம் அமையும். இது போன்ற படத்தை இந்திய சினிமாவில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்” என்று தெரிவித்து எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார்.

.



Source link