ஜெயிலர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம், கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். தனது வித்தியாசமான மேக்கிங்கால் ரசிகர்களின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார்.

இதனால் அவரும் ரஜினிகாந்த் இணையும் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் கூலி படத்தை தயாரித்து வருகிறது.

Also Read: 
சிவாஜி படத்தில் தொடங்கிய பயணம்… ரஜினி படங்களுக்கு இந்தியில் குரல் கொடுக்கும் மயூர் வியாஸ்…

இப்படத்தின் தலைப்பை டீசர் வாயிலாக படக்குழுவினர் அறிவித்தனர். இதற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில், “தங்கமகன்” படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடல் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகைகள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பையும் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்து ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தில் தேவா என்ற காதிபத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், உபேந்திர ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விளம்பரம்

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read: 
ரஜினிகாந்த் பிறந்தநாள்.. நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்.. கேக் வெட்டி ஆட்டம் பாட்டம்!

கூலி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது, மே மாதம் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று டிசம்பர் 12-ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினியின் பிறந்தநாளை உலகளவில் உள்ள ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

விளம்பரம்

கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது X பக்கத்தில் ‘இன்று மாலை 6 மணிக்கு’ என்ற பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் அப்டேட் வெளியாக போகிறது என்று கூறி வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு சம்பவம் உறுதி, ரசிகர்கள் பலரும் லோகேஷ் கனகராஜ் 6 மணிக்கு என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

.





Source link