நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து நள்ளிரவில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நள்ளிரவில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

அதேபோல், ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்த ‘தளபதி’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ‘தளபதி’ படத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Also Read: 
சிவாஜி படத்தில் தொடங்கிய பயணம்… ரஜினி படங்களுக்கு இந்தியில் குரல் கொடுக்கும் மயூர் வியாஸ்…

சரியாக நள்ளிரவு 12 மணிக்கு காட்சிகள் நிறுத்தப்பட்டு கேக் வெட்டி ரஜினிகாந்தின் பிறந்த நாளை கொண்டாடினர். இதில், ரோபோ சங்கர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு திரையரங்கை அதிரவிட்டனர்.

இதேபோன்று குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிலும் தளபதி படம் திரையிடப்பட்டது.

விளம்பரம்

இதற்கிடையே, மதுரை அருகே, தீவிர ரசிகர் ஒருவர், ரஜினிக்கு ஏற்கெனவே கோயில் கட்டிய நிலையில் பிறந்த நாளையொட்டி புதிய உற்சவர் சிலை ஒன்றை நிறுவியுள்ளார்

Also Read: 
சம்பவம் உறுதி.. இன்று வெளியாகிறது கூலி அப்டேட்? லோகேஷ் கனகராஜ் ட்வீட்!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும் ரஜினியின் தீவிர ரசிகருமானவர் கார்த்திக். ரஜினியின் கவனத்தை ஈர்த்து அவரை நேரில் சந்திப்பதற்காக அவருக்கு கடந்த ஆண்டு கோயில் ஒன்றை கட்டினார்.

ரஜினியை சந்திக்க அழைப்பு ஏதும் வரவில்லை என்ற போதிலும், மனம் தளராத அவர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த மாப்பிள்ளை பட கதாபாத்திரத்தை சிலையாக நிறுவியுள்ளார். சிறப்பு யாகம், அபிஷேகம் செய்து வழிபட்டார். ரஜினியிடம் இருந்து அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

.



Source link