7
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின், புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (09) தில்லையடியில் இடம்பெற்றது.
கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான எம்.டி.எம். தாஹிர், எம்.எச். முஹம்மத் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் தினகரன் நிருபர்