உலக உணவுத் திட்டத்தின் ஒரு அம்சமாக இலங்கைக்கு 55,000 மெற்றிக்  தொன் MOP உரத்தை ரஷ்யா நன்கொடையாக வழங்கியுள்ளது. MOP உரத்துடனான ரஷ்ய கப்பல் நேற்று (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த உரத்தை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்றது. இதன்போது, இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan விவசாயத்துறை அமைச்சர்  கே.டி.லால்காந்தவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

நிகழ்வில் விவிசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள், ரஷ்ய தூதரக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 





Source link