அம்பாறை மாவட்டத்தில் மூடப்பட்ட சதொச வர்த்தகநிலைய கிளைகளை மீண்டும் திறக்குமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வர்த்தக, உணவு கூட்டுறவு துறை அமைச்சரிடம் எழுத்து மூலமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் திறந்து வைக்கப்பட்ட நற்பிட்டிமுனை, மாளிகைகாடு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேச சதொச வர்த்தகநிலைய கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த பிரதேச மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை இப்பிரதேச மக்களும் அரசாங்கம் வழங்கும் மானிய விலையில் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அஷ்ரப் தாஹிர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கோட்டா, ரணில் அரசாங்கத்தால் மக்கள் நலன் பாராது மூடப்பட்ட இந்த சதொச கிளைகளை அவசரமாக மக்கள் பாவனைக்காக மீண்டும் திறந்து தந்துதவுமாறும் அஷ்ரப் தாஹிர் அமைச்சரிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 www.instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK
The post அம்பாறை மாவட்டத்தில் மூடப்பட்ட சதொசகளை மீள திறக்கவும் appeared first on Thinakaran.