இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மின்பிடி மற்றும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தினகரனுக்கு தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று முன் தினம் (11) கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில், இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, இலங்கையின் கடல் வளங்கள் சூரையாடப்படுவது தொடர்பாகவும் சாதகமான முறையில் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இருதரப்பு மீனவர்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே தீர்த்துவைக்க முடியும் என நம்புவதாகவும் மீனவர்களின் பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக நடத்தி தீர்வொன்றை எட்டுவதற்கான சாதகமான சமிக்ஞையை  இச் சந்திப்பு தந்ததாகவும் அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.

மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போதும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.

The post இந்திய மீனவர்களின் அத்துமீறல் தூதுவர் ஜாவுடன் அமைச்சர் பேச்சு appeared first on Thinakaran.



Source link