22
– விரைவில் சந்தைக்கு விடுவிக்க விசேட ஏற்பாடு
கடந்த டிசம்பர் 04ஆம் திகதி முதல் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை அடுத்து தற்போது நாட்டிற்கு அரிசி இறக்குமதி ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, டிசம்பர் 10ஆம் திகதி முதல் நேற்று (12) மாலை 5.30 மணி வரை 1,900 மெற்றிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர், மேலதிக பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இந்த அரிசித் தொகையானது, சுங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விரைவாக விடுவிக்கப்படவுள்ளதாகவும், இலங்கை சுங்கத்தின் ஆபத்து முகாமைத்துவம், மத்திய சரக்குகள் சோதனை, தடுப்பு, பதிவுத் திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக மிக விரைவில் சந்தைக்கு வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அரிசித் தொகையானது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு, பச்சை அரிசி மற்றும் அவித்த/ புழுங்கல் அரிசி ஆகியன அதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 www.instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK
Rizwan Segu Mohideen