யோகி பாபு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ என்ற படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். அவரின் முதல் திரைப்படமே பலராலும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.

இந்த நிலையில், தன்னுடைய 3வது திரைப்படத்தை விக்ரம் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்குகிறார். அந்த திரைப்படத்தை மாவீரன் படத்தின் தயாரிப்பாளர் அருள் விஷ்வா தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் இரண்டு படத்திலும் சமூக பிரச்சனையை கதையோட்டத்துடன் கூறிய மடோன் அஸ்வின், இந்த திரைப்படத்திலும் அதுபோன்ற ஒரு கதை களத்தையே கையாள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

மடோன் அஸ்வின் விக்ரம் இணையும் படத்திற்கான முதல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘வீரா தீர சூரா’ படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விக்ரமின் இந்த பட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிரசெய்துள்ளது.

விளம்பரம்

.

  • First Published :





Source link