உலக மண் தினத்தை முன்னிட்டு அண்மையில் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மரநடுகை நிகழ்வும், விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய குழுத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாய விரிவாக்க நிலைய போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது மரநடுகையைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு கறுவா கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி விசேட நிருபர்





Source link