விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடினமாக உழைப்பவர்கள் ஒருபோதும் வாழ்கையில் தோல்வியடைவதில்லை என்பதற்கு பலரது வாழ்கைப் பயணம் உதாரணமாக உள்ளது. இவர்களின் அர்ப்பணிப்பு பெரும்பாலும் வெகுமதியை அளிக்கிறது. இதற்கு பிரேம்சந்த் கோதா ஒரு சிறந்த உதாரணம். ராஜஸ்தானில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்த கோதா, இந்தியாவின் கோடீஸ்வர பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். எளிமையான பின்னனியில் இருந்து வந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் அவரது பயணம் உறுதியும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டதாகும். வாருங்கள், அவரது வாழ்க்கை கதையை பற்றி தெரிந்துகொள்வோம்.

விளம்பரம்

பிரேம்சந்த் கோதா முன்னணி மருந்து நிறுவனமான இப்கா ​​லேபரட்டரீஸின் (Ipca Laboratories) தலைவர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தின் நிதிகளை நிர்வகிக்கும் பட்டய கணக்காளராக பணியாற்றினார். இருப்பினும், 1975-ல் அவர் பச்சன் குடும்பத்துடன் இணைந்து, அப்போது தத்தளித்துக்கொண்டிருந்த இப்கா ​​ஆய்வகங்களை லாபம் ஈட்ட உதவியதும் அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது.

கோதாவின் தலைமையின் கீழ், இப்காவின் (pca) வருவாய் ரூ.54 லட்சத்தில் இருந்து ரூ.4,422 கோடியாக உயர்ந்தது. இன்று, இந்நிறுவனம் மருந்துத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது. நீரிழிவு நோய், இருதய பிரச்சனைகள், வலி ​​மேலாண்மை மற்றும் மலேரியா ஆகியவற்றிற்கான சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

விளம்பரம்

கோதாவின் கேரியர் பச்சன் குடும்பத்துடன், குறிப்பாக ஜெயா பச்சனுடனான தொடர்பு மூலம் வடிவம் பெறத் தொடங்கியது. 1999-ம் ஆண்டு நிதிச் சிக்கல்கள் காரணமாக அமிதாப்பச்சன் குடும்பம் இப்காவின் பங்குகளை விற்ற போதிலும், கோதா தொடர்ந்து நிறுவனத்தை வெற்றியை நோக்கி வழிநடத்தினார். அவரது அர்ப்பணிப்பு இப்காவை ரூ.28,000 கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியது. இது அவரது தனித்துவமான வணிக புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியது.

இப்கா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்ததோடு, பிரேம்சந்த் கோதா ரூ.10,800 கோடிக்கு (தோராயமாக $1.3 பில்லியன்) தனிப்பட்ட ரீதியாக செல்வத்தை உருவாக்கியுள்ளதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. கோதாவின் வெற்றிக் கதை அவரது அசைக்க முடியாத மன உறுதி, குழுவாக இணைந்து செயல்படுவது மற்றும் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிப்பதாக உள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க: 
ஓலாவில் இருந்து விலகி டிவிஎஸ்-ல் இணைந்த முக்கிய அதிகாரி… என்ன காரணம் தெரியுமா?

கணக்குகளை நிர்வகிப்பதில் தொடங்கிய கோதாவின் வாழ்க்கைப் பயணம், இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றை தலைமையேற்று நடத்துவது பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. இது இந்தியர்களுக்கு இருக்கக்கூடிய தொழில் முனைவோர் உணர்வை எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமின்றி சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள பலருக்கும் தங்கள் கனவுகளை அடைய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் செயல்பட உந்துதலாக உள்ளது.

விளம்பரம்

.



Source link