ஹைதராபாத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜூன், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு துணையாக இருப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில், ரசிகர்களுடன் புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜூன் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நாம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்த நிலையில், உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.
இருப்பினும் ஆவணங்கள் கிடைப்பது தாமதமானதால், அல்லு அர்ஜூன் நேற்றிரவு சிறையில் இருந்தார். இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு மத்திய சிறையில் இருந்து அல்லு அர்ஜூன் வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார். பின்னர் வீடு திரும்பிய நடிகர் அல்லு அர்ஜுனை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கட்டியணைத்து வரவேற்றனர்.
இதையும் படிங்க:
புஷ்பா பட வாய்ப்பை நிராகரித்த அந்த 3 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
அல்லு அர்ஜூனை கைது செய்து சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என்று கூறியுள்ள அவரது வழக்கறிஞர் அசோக் ரெட்டி, இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
.