‘புஷ்பா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்துடைய 2ம் பாகமாக ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்திற்கு தமிழ்நாடு உள்பட தெலுங்கு மொழி அல்லாத மாநிலங்களில் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கும் மேலாக இந்த திரைப்படம் ஓடினாலும் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படவில்லை என்றும், கதைக்களம் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளதால் சினிமா விரும்பிகள் மீண்டும் மீண்டும் இந்த படத்தை பார்த்து வருவதாகவும் பல பாசிட்டிவான கருத்துக்கள் வெளியானது.
புஷ்பா 2 படம் வெளியான முதல் நாள் அன்று மட்டும் இந்த திரைப்படம் ரூ. 294 கோடி அளவுக்கு வசூல் செய்தது. இது எந்த ஒரு இந்திய படமும் செய்யாத சாதனையாகும். முதல் 2 நாட்களில் 449 கோடி ரூபாய் அளவுக்கு இந்த திரைப்படம் வசூல் செய்தது. 3 நாட்கள் முடியும் முன்னரே இந்த திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
புஷ்பா, புஷ்பா 2 என இரண்டு பாகங்களுமே மக்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்து இதுவரை எந்த ஒரு இந்திய படமும் படைக்காத சாதனையை படைத்துள்ளது. இத்தனை புகழை அள்ளிக்குவித்துள்ள புஷ்பா படத்தை இயக்கவேண்டும் என்று இயக்குநர் சுகுமார் முடிவு செய்தபோது அவர் எண்ணத்தில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன் இல்லையாம். மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கு அவரது எண்ணத்தில் இருந்த அந்த 3 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
இதையும் படிங்க:
Allu Arjun Arrest: நடிகர் அல்லு அர்ஜுன் கைது.. ஹைதராபாத் போலீஸ் அதிரடி.. பின்னணி இதுதான்!
இயக்குநர் சுகுமார் முதல் முதலில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய நடிகர் தெலுங்கு ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவை தானாம். இதுவரை நல்லவர் கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த மகேஷ் பாபுவுக்கு செம்மரக்கடத்தல் கதையில் அந்த கதாபாத்திரம் தனக்கு நெகட்டிவாக அமைந்துவிடக்கூடாது என்று அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டாராம். அதேபோல், ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் அணுகிய முதல் நடிகை சமந்தா தானாம். ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த சமந்தா மீண்டும் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க நோ சொல்லிவிட அந்த கேரக்டரில் ரஷ்மிகா நடித்தார்.
அதே போல் புஷ்பா படத்தின் முக்கிய வில்லன் பகத் பாசில் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் சுகுமார் முதலில் அணுகியது நடிகர் விஜய் சேதுபதியிடம் தானாம். அப்போது அவரிடம் தேதி இல்லாததால் புஷ்பா படத்தில் நடிக்கமுடியாமல் போனது.
.