2024ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். இந்த ஆண்டு முடிந்து 2025ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த பாடல்கள் என இந்த ஆண்டு நடந்த அனைத்திலும் சிறந்தது இதுதான், இவர்கள்தான் என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியாகும். அதேபோல டாப் 10 தரவரிசை செய்யப்பட்ட பட்டியலில் கூகுள் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கூகுள் நிறுவனம் 2024ம் ஆண்டு அதிகளவில் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிகம் தேடிய அந்த படங்கள் எவை தெரியுமா?

விளம்பரம்

ஸ்திரீ 2: டாப் 10 ல் முதல் இடத்தை பிடித்துள்ள படம் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவான இந்த ஹாரர் காமெடி படத்தின் முதல் பாகம் (ஸ்திரீ) 2018ம் ஆண்டு வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் 2வது பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கல்கி 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘கல்கி 2898 AD’. ஜூன் 27 உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியான ‘கல்கி 2898 AD’ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை குறித்து பல விமர்சனங்களும் கிளம்பியது, விமர்சனங்களுக்கு மத்தியிலும் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது.

விளம்பரம்

12த் ஃபையில்: விக்ரம் மாஸ்ஸி நடிப்பில் வெளியான இந்த படம் போட்டித்தேர்வுகள் எழுதுவோர் மட்டுமல்லாமல் பலருக்கு பெரும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்தது. இந்த படமானது கடந்த ஆண்டு வெளியானாலும் பலரும் இந்த படத்தை இந்த ஆண்டு கூகுளில் தேடியுள்ளனர்.

லாபத்தா லேடீஸ்: சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில், இந்தியில் வெளியான ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டுள்ளது. பெண்களை மையமாக வைத்து பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படம் பலரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றி பெற்றது.

விளம்பரம்

ஹனுமான்: பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவெர்சுக்கு கீழ் உருவான படம் ‘அனுமான்’. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த யூனிவெர்சுக்கு கீழ் அடுத்ததாக ‘ஜெய் ஹனுமான்’ படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 
புஷ்பா பட வாய்ப்பை நிராகரித்த அந்த 3 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

மகாராஜா: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான ‘அமகாராஜா’ திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற இந்த படம் சீனாவிலும் திரையிடப்பட்டது. மேலும் Netflix ல் வெளியான இந்த படம் ஓடிடி-ல் வெளியான படங்களில் அதிகப்பேரால் பார்க்கப்பட்ட படங்களில் முதல் இடத்தில் உள்ளது.

விளம்பரம்

அதே போல் கோலிவுட், டோலிவுட்-ல் கொண்டாடப்பட்ட மோலிவுட் படமான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படம் 7வது இடத்திலும், விஜயின் ‘தி கோட்’ திரைப்படம் 8வது இடத்திலும், பிரபாஸின் ‘சலார்’ திரைப்படம் 9வது இடத்திலும் உள்ளது. மேலும் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 10வது இடத்தில் பகத் பாசிலின் ‘ஆவேசம்’ படம் உள்ளது.

.



Source link