‘கொரோனா குமார்’ பட விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு செலுத்திய ஒரு கோடி ரூபாயை, வட்டியும், முதலுமாக திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர், பாடகர், இயக்குநர் என பல்வேறு முகம் கொண்ட சிலம்பரசன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உலா வருகிறார். குழந்தை நட்சத்திரமாக மின்னிய சிம்பு, கதாநாயகனாக மன்மதன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மூலம் முத்திரை பதித்தார். இடையில் பெரிய அளவில் வெற்றிப் படங்களை கொடுக்காத சிம்பு, மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இதனிடையே, ‘கொரோனா குமார்’ படத்தில் கமிட் ஆகி சர்ச்சையில் சிக்கினார்.

விளம்பரம்

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்காக, 9 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. முன் பணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு 4 கோடியே 50 லட்ச ரூபாய் சிம்புவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், படப்பிடிப்புக்கு வரவில்லை என சிம்பு மீது தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியது.

விளம்பரம்

இதையும் படிக்க:
நாக சைதன்யாவிடம் ஜீவனாம்சம் கேட்கும் சமந்தா..? தீயாய் பரவும் தகவல்… உண்மை என்ன?

இதனால், கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க கோரி, தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிம்வுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவனத்திற்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணனை மத்தியஸ்தராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விளம்பரம்
கிளாமர் போஸில் கீர்த்தி சுரேஷ்… ரைலாகும் போட்டோஸ்.!


கிளாமர் போஸில் கீர்த்தி சுரேஷ்… ரைலாகும் போட்டோஸ்.!

இந்நிலையில், கொரோனா குமார் பட விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதாக கூறினார்.

இதனால், சிம்பு தரப்பில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சிம்பு செலுத்திய டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

.



Source link