குறைந்த விலையில் ஹை-என்ட் அம்சங்களுடன் கூடிய Moto G35 என்ற 5ஜி மொபைலை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்த மொபைல் ரூ.10,000 பட்ஜெட் செக்மென்ட்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மொபைலில் 4K வீடியோரெக்கார்டிங், 1,000நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் கூடிய 120Hz டிஸ்ப்ளே, வீகன் லெதர் டிசைன், Dolby Atmos-க்கான சப்போர்ட்டுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஸ்மார்ட் வாட்டர் டச் டெக்னலாஜி என பல அம்சங்கள் உள்ளன.

Moto G35 மொபைலின் விலை:

விளம்பரம்

இந்தியாவில் மோட்டோ ஜி35 மொபைலின் விலை ரூ.9,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த டிவைஸ் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி முதல் Flipkart வழியாக விற்பனைக்கு வரும். தவிர நாட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் அல்லது மோட்டோரோலாவின் ஆன்லைன் வெப்சைட் மூலமாகவும் இந்த மொபைலை வாங்கலாம்.

புதிய Moto G35 மொபைலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட் ஃபோனில் மிக சிறிய பெசல்கள் கொண்ட மிகப்பெரிய டிஸ்ப்ளே உள்ளது. இந்த மொபைலில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 1,000நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சேம்ப்ளிங் ரேட் கொண்ட 6.7 இன்ச் ஃபுல்-HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் பேனலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கோட்டிங் உள்ளது. ஸ்மார்ட் வாட்டர் டச் டெக்னலாஜி கொடுக்கப்பட்டுள்ளதால் யூஸர்கள் ஈரமான கைகளாலும் இந்த மொபைலை பயன்படுத்த முடியும்.

விளம்பரம்
உடல் எடையை குறைக்க உதவும் 9 குளிர்கால பானங்கள்.!


உடல் எடையை குறைக்க உதவும் 9 குளிர்கால பானங்கள்.!

இந்த மொபைலின் பின்புறத்தில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது, இதில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் ஆகியவை அடங்கும். யூஸர்கள் இந்த கேமராவை கொண்டு 4K ரெசல்யூஷனிலும் வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. மொபைலின் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.Unisoc T760 ப்ராசஸரை கொண்டுள்ள இந்த மொபைல், Android 14 OS-ல் இயங்குகிறது, மேலும் இது லேட்டஸ்ட்டாக வெளியிடப்பட்ட Android 15 OS-ஐ பெற தகுதியுடைய டிவைஸ் ஆகும்.

விளம்பரம்
நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சிறுநீரக நோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகள்.!


நீங்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சிறுநீரக நோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகள்.!

இந்த மொபைலுக்கு யூஸர்கள் ஒரு வருட ஆண்ட்ராய்டு OS அப்கிரேட் மற்றும் 3 செக்யூரிட்டி அப்டேட்ஸ்களை பெறுவார்கள் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரி உள்ளது. இந்தபுதிய மோட்டோரோலா ஃபோன் IP52 ரேட்டிங்கை கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக இந்த மொபைல் சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை கொண்டு உள்ளது. இந்த மொபைலில் இருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 5G, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.0, GPS, A-GPS, LTEPP, GLONASS, Galileo, QZSS, ஒரு 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் USB Type-C போர்ட் உள்ளிட்டவை அடங்கும். இந்த மொபைலின் மொத்த எடை 185கிராம் ஆகும்.

விளம்பரம்

.



Source link