2024ம் ஆண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். இந்த ஆண்டு முடிந்து 2025ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், சிறந்த டாப் 10 நடிகை, சிறந்த டாப் 10 நடிகர், சிறந்த டாப் 10 படம், சிறந்த பாடல்கள் என இந்த ஆண்டு நடந்த அனைத்திலும் சிறந்த டாப் 10 இதுதான், இவர்கள்தான் என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியாகும். அதேபோல டாப் 10 தரவரிசை செய்யப்பட்ட பட்டியலில் கூகுள் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், 2024ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டி டாப் 10 இடத்தை பிடித்துள்ளது தமிழ் படங்களின் பட்டியல் இதோ..

விளம்பரம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2024ம் ஆண்டின் தொடக்கம் சற்று ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம். மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் கூட சொதப்பிவிட்டது. தொடர்ந்து ஆண்டின் முதல் பாதியில் வெளியான படங்கள் அதிர்த்து எடுத்திருக்கவில்லை. “ப்ரேமம்”, “மஞ்சுமெல் பாய்ஸ்”, “ஆடுஜீவிதம்” போன்ற படங்கள் கொண்டாடப்பட்டது. முதல் பாதியில் கோட்டைவிட்டாலும், 2வது பாதியில் விட்டதை பிடித்தது தமிழ் சினிமா, இரண்டாம் பாதியில் வெளியான தரமான படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

விளம்பரம்

அப்படி 2024ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலைக்கு ஈட்டிய டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ..

  • கோட்  ரூ. 448 கோடி

  • அமரன் ரூ. 340

  • வேட்டையன் ரூ. 265 கோடி

  • மகாராஜா ரூ. 178 கோடி

  • ராயன் ரூ. 155 கோடி

  • இந்தியன் 2 ரூ. 150 கோடி

  • கங்குவா ரூ. 120 கோடி

  • அரண்மனை 4 ரூ. 105 கோடி

  • தங்கலான் ரூ. 80 கோடி

  • டிமாண்டி காலனி ரூ. 60 கோடி

.

  • First Published :



Source link