பொதுமக்கள் தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நல்லதொரு திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் அதனை நிலமாகவும், சிலர் தங்கத்திலும் முதலீடு செய்கிறார்கள். ஆனால் அனைத்து காலங்களிலும் சிறந்த முதலீடுகளில் ஒன்றாக தபால் அலுவலக திட்டங்கள் உள்ளன.
அந்த வகையில் மாதம் ரூ. 9,250 வருமானம் தரக்கூடிய திட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம். நிலையான வருமானத்தை பெற விரும்பும் நபர்கள் இந்த திட்டத்தில் இணையலாம்.
இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் உங்கள் முதலீட்டை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் Single மற்றும் Joint என 2 அக்கவுன்டுகள் உள்ளன. சிங்கிள் அக்கவுன்ட்டில் தனி நபர்களும், ஜாயின்ட் கணக்கில் 2 முதல் 3 பேர் வரையிலும் சேர்ந்து கொள்ளலாம்.
ஜாயின்ட் கணக்கில் கணவர் அல்லது மனைவியுடன் சேர்ந்த இந்த திட்டத்தில் இணையலாம். அப்படி இந்த திட்டத்தில் சேரும்போது முதலில் ரூ. 15 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். இதற்கு மாதம் 7.4 சதவீத வட்டி என்ற வகையில் மாதம்தோறும் ரூ. 9,250 ம், ஆண்டுக்கு ரூ. 1,11,000ம் கிடைக்கும்.
5 ஆண்டுகளுக்கு மொத்தமாக 5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரையில் வாடிக்கையாளர்கள் பெறலாம். சிங்கிள் அக்கவுன்ட் என்றால் தனி நபர்கள் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதற்கு 7.4 சதவீத வட்டி என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 66,600-ம், மாதம் ரூ. 5,500 வருமானம் கிடைக்கும்.
இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் தபால் அலுவலகத்தில் கணக்கை தொடங்கலாம். 10 வயதுக்கு குறைவான குழந்தை என்றாலும் அந்த குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கும் வசதி உள்ளது. இதற்கு ஆதார், பான் மற்றும் அடையாள அட்டை தேவை.
.