முன்பெல்லாம் கடை வீதிக்குச் செல்ல, வேலைக்கு செல்பவர்கள் உணவு எடுத்துச் செல்ல என பல தேவைகளுக்கு வயர் கூடைகள் பயனுள்ளதாக இருந்தது. இதனால் முன்பு பள்ளிகளிலும் கூடை பின்ன பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் காலமாற்றத்தால் கூடை பயன்பாடு தற்போது மக்கள் மத்தியில் குறைந்து விட்டது.

ஆனால் கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாமியார், மருமகள், மகன் என்று எல்லாரும் இணைந்து கூடை பின்னும் தொழிலை இந்த ட்ரெண்டுக்கு ஏற்ற வகையில் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து அக்கம்பக்கம் உள்ள பெண்களும் எந்த வித வயது வரம்பும், கல்வித் தகுதியும் இன்றி பணியாற்றி வருகின்றனர்.

விளம்பரம்

மேலும், இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமில்லாமல் புதிதாக கற்றுக் கொள்பவர்களும் இங்கு கலந்து கொண்டு கற்றுக் கொண்டும் வேலை செய்யலாம். எந்த வித வேலைப் பளு இன்றி, இல்லத்தரசிகளுக்கு ஏற்ற விதத்தில் இந்தக் கைத்தொழில் உதவி வருகிறது. தற்போது இந்தக் கூடை பின்னும் தொழிலில் M.A முதல் M.E வரை பயின்றவர்கள் அனைவரும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: உயிர் காக்க உருவான ஆக்ஸிஜன் வங்கி… மக்களுக்காக உழைக்கும் 1500 மரங்கள்…

இது குறித்து சரஸ்வதி கூறுகையில், “எனக்கு ஸ்கூலில் சின்ன வயசில் கூடை பின்ன கற்றுக் கொடுத்தார்கள். அதைக் கற்றுக் கொண்டு அப்படியே விட்டுவிட்டேன். அதை இப்பொழுது முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்திருக்கிறோம். வீட்டில் டிவி பார்க்கும் நேரத்தில் இதைப் பின்னி பக்கத்து வீடுகளில் கொடுக்கலாம் என்று ஆரம்பித்தோம். கொஞ்சம் விற்பனையும் ஆனது.

விளம்பரம்

இந்த மாதிரி கூடை அக்கம் பக்கத்தில் கொடுப்பதைப் பார்த்து நிறைய பேர் கேட்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் வருமானமும் ஈட்ட முடியும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் கூப்பிட்டேன். இதைச் செய்வதால் நன்றாக நேரம் போகிறது சுறுசுறுப்பாகவும் இருக்கிறோம். சிறுவயதில் நாங்கள் இந்த வயர் கூடையைப் பள்ளிக்கூடத்திற்கும், காய்கறி வாங்குவதற்கும், மளிகை சாமான் வாங்குவதற்கும் கொண்டு செல்வோம். அதை யோசித்துத் தான் திரும்ப ஆரம்பித்தோம்.

ஆனால் அதை இந்த காலத்துப் பெண்களும் பயன்படுத்தும் வகையிலும், அவர்களுக்குப் பிடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று ஹேண்ட் பேக், லேப்டாப் பேக் கையில் பிடித்துக் கொண்டு போகும் மாதிரி எல்லாம் செய்து வருகிறோம். இந்த காலத்திற்கு ஏற்றவாறு செய்வதால் ஆன்லைனில் விற்பனை செய்து பார்க்கலாம் என்று என்னுடைய மகனும், மருமகளும் சொன்னார்கள்.

விளம்பரம்

இதையும் படிங்க: எலிக்கு எமன்… விவசாயிக்கு நண்பன்… 40 ஆண்டுகளாக விவசாயத்தைக் காக்க உழைக்கும் எலி மணி…

ஆன்லைனில் போட்ட பின்னர் விற்பனை அதிகரித்தது. நிறைய பேர் தாம்பூல பை வேண்டும், ரிட்டன் கிப்ட் வேண்டுமென்றும் கேட்டார்கள். அவர்களுக்கும், இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ற வகையில் என்ன மாதிரி வேண்டும் என்று கேட்டாலும் அதேபோல் செய்து கொடுத்து வருகிறோம்.

என் ஒருத்தியால் மட்டும் இதைச் செய்ய முடியாது என்று அக்கம்பக்கம் இருப்பவர்களுடன் சேர்ந்து செய்து வருகிறோம். கூடையே பின்னத் தெரியாமல் இருந்தாலும் அவர்களுக்குப் பழக்கிக் கொடுத்து, அவர்களுக்கு ஒரு வருமானம் வரும் வகையில் செய்து வருகிறோம். இந்தக் கூடை பின்னப் பழகிக் கொடுப்பதற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை, இங்கு வந்தால் பின்னப் பழகிக் கொண்டு அதை இங்குக் கொடுத்து அவர்களுக்கு ஒரு வருமானம் வரும் வகையில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் அந்தக் குழுவில் இணைந்து கூடையைப் பழகி தொழில் செய்து வரும் குடும்பப் பெண்கள் கூறுகையில், “என் பெயர் ரஞ்சிதா M.E முடித்திருக்கிறேன். நான் 9ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இந்தக் கூடை பின்னப் பழகிக் கொண்டேன். எனக்குச் சிவன் கண் பின்னத் தெரியாது இங்கு வந்து தான் பழகிக் கொண்டேன், அம்மா தான் பழகிக் கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: மாடு அதிகம் பால் கொடுக்கணுமா… இந்த மாதிரி உணவு கொடுத்தால் போதும்…

எனக்குக் குழந்தைகள் இருப்பதால் என்னால் வேலைக்கும் போக முடியாது. வேலைக்குப் போனால் குழந்தைகளைப் பார்க்க முடியாது என்று இந்த வேலைக்கு வந்தேன். விதமாகக் கூடை பின்னுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். வேலைக்குச் சென்றால் வொர்க் பிரஷர் இருக்கும், ஆனால் இதில் அப்படிக் கிடையாது. வேலைக்குச் சென்றால் ஒரு நாள் இரண்டு நாள் மட்டுமே லீவ் எடுக்க முடியும் ஆனால் இங்கு அப்படிக் கிடையாது வேலை பிரஷர் கிடையாது பத்துநாள் லீவு எடுத்துக் கொண்டாலும் திரும்பவும் வந்து நான் வேலை செய்யலாம்.

விளம்பரம்

சும்மா இருந்தால் அதை இதை யோசிக்கத் தோன்றும், ஆனால் இந்த வேலை செய்வதால் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறது. இந்த வேலை செய்து கொண்டு வீட்டையும் பார்க்கலாம், என் குழந்தையும் பார்த்துக் கொள்ளலாம். எனக்கு இந்த வேலை செய்ய மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த வேலை செய்து இதன் மூலம் எனக்கு ஒரு வருமானமும் வருகிறது” என்றார்.

ஹரிப்பிரியா கூறுகையில், “நான் இரண்டு – மூன்று மாதங்களாக இங்கு வந்து கூடை பின்னி வருகிறேன். நான் முதலில் இங்கு வரவில்லை அம்மாவைத் தான் முதலில் நான் இங்கு அழைத்து வந்தேன் அம்மா அனைத்துப் பின்னலும் பின்னுவார்கள். வீட்டில் இருப்பதால் எதுவும் யோசிக்காமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று இங்கு கூட்டி வந்தேன். நான் இங்கிருந்து வாங்கிய அம்மாவிடமும், அம்மாவிடம் வாங்கி இங்கும் கூடையைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்படியே அம்மா சும்மா இருக்கும் நேரத்தில் நான் செய்வேன். இப்பொழுது நானும் கூடை பின்னிக் கொண்டிருக்கிறேன்.

விளம்பரம்

இதையும் படிங்க: தினமும் 20 லிட்டர் பால் கொடுக்கும் கிர் மாடு… விலை எவ்ளோ தெரியுமா…

ஆர்டர் அதிகமாக வந்தால் அம்மா எனக்குக் கால் பண்ணிச் சொல்வார்கள் வாங்கிக் கொண்டு வந்து செய்து கொடுப்போம். எனக்கு ஹேண்ட் மேட் ஐட்டம் மிகப் பிடிக்கும் கிராஃப்ட் ஒர்க் செய்வேன். இதிலும் எனக்கு இன்ட்ரஸ்ட் இருப்பதால் இதை செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இப்பொழுது எல்லா நாட்டும் எனக்குப் பின்னத் தெரியும்” எனத் தெரிவித்தார்.

பக்கத்து வீடு பெண் உமா மகேஸ்வரி கூறுகையில், “மகன் வேலைக்காக சென்னைச் சென்று விட்டான் நான் தனியாக இருக்கிறேன் என்று வந்து இங்கு பழகினேன். இப்பொழுது இரண்டு வருடமாக இந்த அக்காவிடம் கூடை பின்னிக் கொண்டிருக்கிறேன். மகன் இல்லாததால் வருத்தமாக நிற்கும் இப்பொழுது அந்த வருத்தத்தைத் தவிர்க்க இங்கு வேலைக்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். மொபைல், டிவி போன்ற எதுவும் பார்ப்பது கிடையாது” எனத் தெரிவித்தார்.

ஜோதிமணி என்பவர் கூறுகையில், “நான் M.A முடித்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்கு கிராஃப்ட் வொர்க் கில் ஆர்வம் அதிகம். குரோசா வயரில் நான் கூடை பின்னுவேன். டெய்லரிங், ஆரி வொர்க், எம்பிராய்டிங். போன்ற எல்லா வேலையும் எனக்கு தெரியும். குழந்தைகள் இருந்ததால் என்னால எதுவும் செய்ய முடியவில்லை.

இதையும் படிங்க: சாபத்தில் உருவானதா தேரிக்காடு… கள்ளர் வெட்டுத் திருவிழாவின் வியக்க வைக்கும் பின்னணி…

தற்போது என் பசங்கள் எல்லாம் காலேஜ் சென்றுவிட்டார்கள். வீட்டில் தனியாக இருந்தேன். இவர்கள் கூடை போடுவதைப் பார்த்து நானும் வந்தேன். இங்கு வந்து பழகிக் கொண்டேன். எனக்கும் ஐடியா இருந்தால் சொல்வேன் அவர்களும் சொல்லிக் கொடுப்பார்கள். இதில் நான் இன்ட்ரஸ்ட் எடுத்து அனைத்தும் பழகிக் கொண்டேன். இங்கு என்ன வேலை என்றாலும் செய்து கொடுத்து விடுவோம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link