நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. ரூ.398 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்டு பிளான் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்ஷனுக்கு 28 நாட்களுக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது.
இந்த புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் பிளான் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப், ஏர்டெல் வெப்சைட் மற்றும் பிற ரீடெயில் அவுட்லெட்ஸ்கள் மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
ஏர்டெல்லின் ரூ.398 ப்ரீபெய்ட் பிளான் மூலம் யூஸர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:
இந்த புதிய ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் பிளான் யூஸர்களுக்கு பல பெனிஃபிட்ஸ்களை வழங்குகிறது. அன்லிமிட்டட் லோக்கல் வாய்ஸ் கால்ஸ், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்ஸ், ஒரு நாளைக்கு 2GB 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை இதில் அடங்கும். இந்த பிளானின் வேலிடிட்டி மொத்தம் 28 நாட்கள் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இந்த புதிய பிளான் பற்றி ஏர்டெல் நிறுவனம் தனது செய்திகுறிப்பு ஒன்றில் கூறி இருப்பதாவது, “இந்த சமீபத்திய பிளான் Hotstar மொபைலுக்கான 28-நாள் சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாக வழங்குவதன் மூலம் தனித்து நிற்கிறது. லைவ் ஸ்போர்ட்ஸ், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் பிரபலமான வெப் சீரிஸ் உட்பட யூஸர்களின் பயணத்தின் போது பிரீமியம் என்டர்டெயின்மென்ட்டிற்கான அக்சஸை வழங்குகிறது. மேலும் இந்த பிளான் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் பொழுதுபோக்குத் தேவைகளை நிவர்த்தி செய்து அவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தடையற்ற இணைப்பை வழங்குவதற்குமான எங்கள் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்று கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் மொபைல் யூஸர்களுக்கு பிரத்யேக பலன்களை வழங்கும் வகையில் நியூஇயர் வெல்கம் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா வீதம் இந்த பிளானில் மொத்தம் 500GB 4ஜி டேட்டா வழங்கப்டுகிறது. மேலும் யூஸர்கள் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச SMS-களுக்கான அக்சஸை பெறுவார்கள். இந்த பிளானின் விலை ரூ.2,025 மற்றும் 200 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
இந்த ரீசார்ஜ் பிளான் மூலம், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema மற்றும் JioCloud உள்ளிட்டவற்றின் இலவச சப்ஸ்கிரிப்ஷனை அனுபவிக்க முடியும். தவிர இந்த ஸ்பெஷல் ரீசார்ஜ் பிளானோடு யூஸர்கள் ரூ.2,150 மதிப்புள்ள தகுதியான பிராண்டுகளின் கூப்பன்களையும் பெறலாம். கடந்த டிசம்பர் 11 முதல் கிடைக்கும் இந்த ஸ்பெஷல் பிளானை நாட்டில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களும் ஜனவரி 11, 2025 வரை பெறலாம்.
.