மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (14)முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் பெருவிழா இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய மக்கள் சார்பாக மிஸ்பா ஜெப மிஷனரி ஆலய மாணவர்களுக்கு இந்திய மக்கள் சார்பாக கலந்து கொண்டு உதவித்திட்டங்களை வழங்குவதில் பெருமையடைகிறேன்.
இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆதரவாக மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தமான திட்டங்களும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது
இன்றையதினம் இலங்கை ஜனாதிபதி இந்தியா பயணிக்கின்றார். அங்கு தங்கியிருந்து இலங்கை சம்பந்தமான பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அதில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சேர்ந்த பல திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற அனைவரோடும் மாணவர்கள், இளைஞர்கள், இங்கே இருக்கின்ற மக்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டது போல இது ஒரு ஆரம்பம்தான் எதிர்காலத்தில் பல விடயங்களோடு சேர்ந்து பயணிப்போம்.
ஒக்டோபர் மாதம் இறுதியில் பெரியளவிலான கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை தொடர்பான அதிகாரிகள் சந்தித்திருக்கிறார்கள் ஆனால் மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மேலும் தெரிவித்தார்.
ஓமந்தை விஷேட நிருபர்
The post மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை appeared first on Thinakaran.