நீங்கள் புதிய லேப்டாப் வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஆப்பிள் மேக்புக் ஏர் எம்3 டேப்லெட்டானது தற்போது இந்திய சந்தையில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இ-காமர்ஸ் நிறுவனமானது 8 ஜிபி ரேம் மாடலின் ஸ்டாக்ஸ்களை கிளியர் செய்ய சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது.

ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் புதிய வேர்ஷனை 16 ஜிபி ரேம் வேரியண்ட் உடன் அறிமுகப்படுத்தியுள்ளது, எனவே பழைய மாடலை நிறுத்தியுள்ளது. விஜய் சேல்ஸ் இந்த மாடலை வெறும் ரூ.94,499-க்கு வழங்குகிறது, இது அதன் வெளியீட்டு விலையான ரூ.1,14,900 ஐ விட மிகவும் குறைவு. அதாவது நீங்கள் லேப்டாப்பில் ரூ.20,401 பிளாட் தள்ளுபடியை பெறுகிறீர்கள்.

விளம்பரம்

இது தவிர, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளில் EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,000 கூடுதல் தள்ளுபடி வழங்குகிறது, இது விலையை மேலும் குறைக்கிறது. இந்த சலுகை மிட்நைட் கலர் வேரியண்டில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனமும் இதே மாடலை ரூ. 98,606க்கு விற்பனை செய்கிறது. இது விஜய் விற்பனையை விட சற்று அதிகமாக இருந்தாலும் அசல் விலையை விட குறைவாகவே உள்ளது.

மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?


மொபைல் போன் கவர் பயன்படுத்துவதால் இத்தனை தீமைகளா.?

மேக்புக் ஏர் எம்2 தள்ளுபடி செய்யப்பட்டாலும், M3 மாடல் ஒரு சிறந்த தேர்வாகும். குறிப்பாக மேக்புக் ஏர் எம்1 இலிருந்து மேம்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாகும். மேக்புக்ஸ் ஆனது லாங் லாஸ்டிங் ஸ்டேபிலிட்டி, சிறந்த பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஏர் மாடல்கள் சிறந்த போட்டோ எடிட்டிங் கேபபிலிட்டிஸ், ஸ்மூத் ஜெனரல் பெர்ஃபார்மன்ஸ், அட்ராக்ட்டிவ் டிஸ்பிளே, பேட்டரி ஆயுள் மற்றும் ஸ்லிம், லைட்வெயிட் டிசைன் ஆகியவற்றை வழங்குகின்றன.

விளம்பரம்

M1 உடன் ஒப்பிடும்போது, ​​M3 சிப் கொண்ட 2024 மேக்புக் ஏர் ப்ராசசிங் ஸ்பீட், இம்ப்ரூவ்டு மல்டிடாஸ்கிங் மற்றும் மெஷின் லேர்னிங் கேபபிலிட்டிஸ் ஆகியவற்றை வழங்குகிறது. 18 மணிநேர பேட்டரி ஆயுளுடன், அடிக்கடி சார்ஜ் செய்யாமல் கிட்டத்தட்ட ஒரு நாள் நீடிக்கும் லேப்டாப்பை விரும்பும் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ஈஸியாக டவுன்லோட் செய்வது எப்படி ?


இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ஈஸியாக டவுன்லோட் செய்வது எப்படி ?

M3 மாடலில் நீங்கள் ஒரு சிறப்பு அம்சத்தைப் பெறுவீர்கள், இந்த லேப்டாப் டூயல் டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது மல்டிடாஸ்கிங் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாகும். மேக்புக் ஏர் எம்3 ஆனது ஆப்பிளின் சிக்னேச்சர் லைட் மற்றும் ஸ்லீக் டிசைன்-ஐ கொண்டுள்ளது. இதில் 24GB வரை ரேம் மற்றும் Wi-Fi 6Eக்கான ஆதரவுடன் வருகிறது. நீண்ட கால பயன்பாட்டிற்கு சிறந்தது. குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு சிறந்த பெர்ஃபார்மன்ஸ் மற்றும் சாஃப்ட்வேர் ஆதரவை வழங்குகிறது.

விளம்பரம்

.



Source link