ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு, காத்திருப்புப் பட்டியல் (Waiting list) டிக்கெட் கிடைக்கும்போது மனதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. டிக்கெட் உறுதியாகுமா இல்லையா என்பதுதான் அது. இந்த குழப்பத்தால் அவர்கள் பயணத்தைத் திட்டமிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு இன்னும் பெரிய பிரச்சனை தான் இது. ஏனென்றால் அவர்கள் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். எவ்வளவு எண் வரை காத்திருப்பு உறுதி செய்யப்படலாம் என்பதை யூகிப்பது கடினம். தற்போது பல இணையதளங்கள் சாத்தியக்கூறுகளைக் கூறுகின்றன, ஆனால் சில நேரங்களில் அவை தவறாகிவிடுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, காத்திருப்பு உறுதிப்பாடு குறித்து ரயில்வே நேரடியாக விளக்கம் அளித்துள்ளது. எவ்வளவு எண் வரை உறுதி செய்யப்படலாம் மற்றும் உறுதி செய்வதற்கான சூத்திரம் என்ன என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்:
ரயில்களில் பண்டிகை காலங்களில் அதிக மக்கள் பயணம் செய்வார்கள். இதனால் ரயில் டிக்கெட் கிடைப்பது சிரமமாக இருக்கும். சில ரயில்களில் காத்திருப்பு 500 வரை கூட சென்றுவிடும். அந்த நேரத்தில் டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு குறைவு. காத்திருப்பு டிக்கெட் இரண்டு வழிகளில் உறுதி செய்யப்படுகிறது: முதலாவது பொதுவான வழி, இரண்டாவது ரயில்வேயின் அவசரகால ஒதுக்கீடு (Emergency Quota).
ரயில்களில் முன்பதிவு செய்த பிறகு, சராசரியாக 21% பேர் டிக்கெட்டை ரத்து செய்கிறார்கள். இதனால் 21% வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள பயணிகளுக்கு டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது, ஸ்லீப்பர் வகுப்பில் ஒரு பெட்டியில் 72 இருக்கைகள் இருந்தால், சராசரியாக முன்பதிவு செய்தவர்களில் 14 பேர் டிக்கெட்டை ரத்து செய்கிறார்கள். அதனால் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள 14 பேருக்கு டிக்கெட் உறுதியாக வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, சுமார் 4 முதல் 5% பேர் டிக்கெட் எடுத்த பிறகும் ரயிலில் பயணம் செய்வதில்லை. இதையும் சேர்த்தால், சுமார் 25%. இதனால் மொத்தமாக ஒரு பெட்டியில் 18 இடங்கள் வரை உறுதி செய்யப்படலாம்.
இதையும் படிக்க:
18 வயதை கடந்த அனைவருக்கும் ஸ்மார்ட் போன்..? தீயாய் பரவும் தகவல் – உண்மை என்ன?
முழு ரயிலிலும் எத்தனை இடங்கள் உறுதியாகலாம்?
உதாரணமாக, ஒரு ரயிலில் ஸ்லீப்பர் பெட்டிகள் 10 உள்ளன. அவற்றில் 10 பெட்டிகளிலும் 18 இடங்கள் உறுதி செய்ய வாய்ப்புள்ளது. இந்த வகையில் காத்திருப்பு 180 வரை உறுதியாகலாம். இதே சூத்திரம் மூன்றாம் வகுப்பு ஏசி (3AC), இரண்டாம் வகுப்பு ஏசி (2AC) மற்றும் முதல் வகுப்பு ஏசி (1AC) வகுப்புகளுக்கும் பொருந்தும்.
எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்
ரயில்வே அமைச்சகத்திடம் அவசரகால ஒதுக்கீடு உள்ளது. இதன் கீழ் 10% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ஸ்லீப்பர், 3AC, 2AC மற்றும் 1AC வகுப்புகளில் வெவ்வேறு எண்ணிக்கை இருக்கும். உடல்நலம் சரியில்லாத நபர் அல்லது தேவைப்படுபவருக்கு ரயில்வே உறுதிப்படுத்தப்பட்ட இடத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த ஒதுக்கீடு உள்ளது. உதாரணமாக, 10% இல் 5% மட்டுமே அவசரகால ஒதுக்கீட்டின் கீழ் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வழங்கப்பட்டால், 5% காத்திருப்பு டிக்கெட்டில் உள்ளவர்கள் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும்.
.