விவோ எக்ஸ்200 ப்ரோ VS ஐபோன் 16 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து, எந்த ஃபிளாக்ஷிப் ப்ரோ மாடல் சிறந்தது என்பதை பற்றிய விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 ப்ரோ தொடர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நிலையான விவோ எக்ஸ்200 மற்றும் எக்ஸ்200 ப்ரோ ஆகியவை அடங்கும். இரண்டு மாடல்களும் முதன்மையான மீடியாடெக் சிப்செட் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகின்றன. இதில் எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னவென்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ இதில் எது சிறந்த மற்றும் முதன்மையான ப்ரோ மாடல் என்பதையும் இங்கு ஆராயலாம்.

விளம்பரம்

விவோ எக்ஸ்200 ப்ரோ VS ஐபோன் 16 ப்ரோ: விவோ எக்ஸ்200 தொடர் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமானது. மேலும் இது ஏற்கனவே, அதன் உயர்தர சிறப்பம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த கேமரா அம்சங்களுடன் பலரையும் கவர்ந்துள்ளது. பல தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்த ஸ்மார்ட்போன் விதிவிலக்கான கேமரா செயல்திறன் மற்றும் இமேஜ் தரத்தை கொண்ட சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் என்று கூறுகின்றனர். ஆனால் இது புதிய ஐபோன் 16 ப்ரோ மாடல்களை விட சிறந்ததா? என்பதை அதன் வேறுபாடுகள் மற்றும் சலுகைகளை வைத்து, ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் எந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சிறந்தது என்பதை அறிய, விவோ எக்ஸ்200 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான ஒப்பீட்டை இங்கே விரிவாக பார்க்கலாம்.

விளம்பரம்

விவோ எக்ஸ்200 ப்ரோ VS ஐபோன் 16 ப்ரோ: டிசைன் மற்றும் டிஸ்ப்ளே

விவோ எக்ஸ்200 ப்ரோ அதன் முந்தைய ஸ்மார்ட்போன்களை போன்ற வடிவமைப்புடன் மிகவும் புதுமையாகவும், பிரீமியம் தோற்றத்திலும் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், அலுமினியம் ஃப்ரேம் மற்றும் மேட் பின்புற பேனலுடன் வருகிறது. மூன்று கேமரா சென்சார்களைக் கொண்ட ஒரு வட்ட கேமரா தொகுதியையும் கொண்டுள்ளது.

உடல் எடையை குறைக்க உதவும் 9 குளிர்கால பானங்கள்.!


உடல் எடையை குறைக்க உதவும் 9 குளிர்கால பானங்கள்.!

மறுபுறம், ஐபோன் 16 ப்ரோ, டைட்டானியம் ஃப்ரேம் மற்றும் பிரீமியம் கட்டமைப்பைக் கொண்ட உறுதியான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இருப்பினும், இந்த இரண்டு ஸ்மார்போன்களுமே பிரீமியமாகவே தெரிகிறது.

விளம்பரம்

டிஸ்ப்ளேவை பொறுத்த வரையில், விவோ எக்ஸ்200 ப்ரோ ஆனது 6.78-இன்ச் எல்டிபிஓ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்ப்ளேவை 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் மற்றும் 4500 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரைட்னசுடனும் வந்துள்ளது. இது எச்டிஆர்10+ (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவையும் வழங்குகிறது. அதேசமயம், ஐபோன் 16 ப்ரோவானது, 6.3 இன்ச் எல்டிபிஓ சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி (LTPO Super Retina XDR OLED) டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் வரையிலான உச்சபட்ச பிரைட்னஸை கொண்டுள்ளது.

விளம்பரம்

விவோ எக்ஸ்200 ப்ரோ VS ஐபோன் 16 ப்ரோ: கேமரா

விவோ எக்ஸ்200 ப்ரோ ஆனது 50 மெகாபிக்சல் இசட்இஐஎஸ்எஸ் (ZEISS) ட்ரூ கலர் கொண்டு பிரதான கேமரா, 200 மெகாபிக்சல் இசட்இஐஎஸ்எஸ் ஏபிஓ (ZEISS APO) டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா என மூன்று கேமரா அமைப்புடனான தொகுப்பைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், முன்புறம், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

அதேசமயம், ஐபோன் 16 ப்ரோ ஆனது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 120மிமீ ஃபோக்கல் லென்த் கொண்ட 12 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமராவை உள்ளடக்கிய மூன்று கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.

விளம்பரம்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 4K 120FPS வீடியோவை வழங்குகின்றன, ஆனால் விவோ எக்ஸ்200 ப்ரோ 8K 30FPS வீடியோவையும் வழங்குகிறது.

குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாத 10 பழங்கள்.!


குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாத 10 பழங்கள்.!

விவோ எக்ஸ்200 ப்ரோ VS ஐபோன் 16 ப்ரோ: செயல்திறன் மற்றும் பேட்டரி

விவோ எக்ஸ்200 ப்ரோவானது மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிராசசர், 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஃபன்டச் 15 ஓஎஸ் (Funtouch 15 OS) அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 இல் இயங்குகிறது, மேலும் விவோ 4 வருட சாஃப்ட்வேர் அப்கிரேடுகளை வழங்குகிறது.

விளம்பரம்

மறுபுறம், ஐபோன் 16 ப்ரோவானது 8GB ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்ட புதிய ஏ18 ப்ரோ சிப் (A18 Pro chip) மூலம் இயக்கப்படுகிறது.

விவோ எக்ஸ்200 ப்ரோ VS ஐபோன் 16 ப்ரோ: விலை

16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்200 ப்ரோவானது ரூ.94,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதேசமயம், ஐபோன் 16 ப்ரோ ஆனது 128ஜிபிக்கு ரூ.1,19,900 என்கிற அதிக விலை வரம்பில் வருகிறது.

.



Source link