விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய உலகத்தில் சரியான முதலீட்டு ஆப்ஷனை தேர்வு செய்வது என்பது எப்போதையும் விட முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் இந்திய முதலீட்டாளர்கள் அதிக அளவில் தேர்வு செய்யும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மற்றும் ஃபிக்சட் டெபாசிட்கள் (FD) ஆகியவை உள்ளன. ஃபிக்சட் டெபாசிட் என்பது நமக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை வழங்குகிறது.

அதே நேரத்தில் SIP என்ற நீண்ட கால முதலீடு உங்களுடைய பணத்தை பல மடங்கு அதிகரித்து தரக்கூடியது. ஆனால் இது சந்தையுடன் தொடர்புடையது. இந்த இரண்டு ஆப்ஷன்களுமே வெவ்வேறு விதமான நன்மைகளை கொண்டுள்ளன. ஆனால் உங்களுடைய பொருளாதார இலக்குகளின் அடிப்படையில் சிறந்த ஒன்றை எப்படி தேர்வு செய்வீர்கள்? இதற்கான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

விளம்பரம்

உறுதியளிக்கப்பட்ட ரிட்டனா அல்லது மார்க்கெட்டுடன் தொடர்புடைய வளர்ச்சியா? பெரும்பாலான இந்தியர்கள் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்கள் காரணமாக ஃபிக்சட் டெபாசிட்களை தேர்வு செய்கின்றனர். ஒரு ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீத வட்டியை பாதுகாப்பான முறையில் எதிர்பார்க்கக்கூடிய ரிட்டனை தரக்கூடியது தான் ஃபிக்சட் டெபாசிட். இதில் நீங்கள் செய்த முதலீட்டு தொகை பாதுகாப்பாக இருக்கும். இதில் எந்தவித ரிஸ்க்கும் கிடையாது.

மறுபுறம் மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள SIP முதலீடு செய்வது உங்களுடைய செல்வத்தை அசுரவேகத்தில் வளர்ச்சி அடைவதற்கு உதவுகிறது. இது சந்தையுடன் தொடர்புடையதாக இருந்தாலும் கடந்த கால ரிட்டன்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது SIP மூலமாக 8 முதல் 15 சதவீத ரிட்டன் கிடைக்கிறது. இந்த ரிட்டன் உறுதி அளிக்கப்பட்டதாக இருக்காது. ஆனால் இது பணவீக்கத்தை சமாளிக்கவும், உங்களுடைய செல்வத்தை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடைய செய்யவும் இது உதவும்.

விளம்பரம்
குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் 10 உணவுகள்.!


குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் 10 உணவுகள்.!

ரிஸ்க்கா ரிவார்டா?:

ஃபிக்சட் டெபாசிட் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் குறுகிய காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த ரிட்டனை பாதுகாப்பான முறையில் வழங்கும் சேவிங்ஸ் ஆப்ஷன். மறுபுறத்தில் SIP ஒரு சில மார்க்கெட்ட தொடர்பான அபாயங்களை கொண்டிருந்தாலும், ஐந்துக்கும் மேற்பட்ட வருடங்கள் முதலீடு செய்வதன் மூலமாக அதிகளவு ரிட்டன்களை எதிர்பார்க்கலாம். எனினும் இந்த ரிட்டன்கள் உறுதியளிக்கப்பட்டவை கிடையாது.

வரி சார்ந்த தகவல்கள்:

ஃபிக்சட் டெபாசிட் மூலமாக நீங்கள் பெரும் வட்டிக்கு உங்களுடைய வருமான வரம்பின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். இந்த வட்டி மூலமாக வரும் ரிட்டன் பிற மூலங்களில் இருந்து வரும் வருமானமாக கணக்கில் கொள்ளப்படுகிறது. SIP பொறுத்தவரை ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவாக வைத்திருக்கும் பங்குகளுக்கு வருமான வரி வரம்பு கருத்தில் கொள்ளப்படாமல் 20% வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட பங்குகளுக்கு 12.5% வட்டி விதிக்கப்படுகிறது. இதில் 1.25 லட்சம் விலக்க வரம்பு விதிக்கப்படுகிறது.

விளம்பரம்
உடல் எடையை குறைக்க உதவும் 9 குளிர்கால பானங்கள்.!


உடல் எடையை குறைக்க உதவும் 9 குளிர்கால பானங்கள்.!

SIP-ஐ தேர்வு செய்ய வேண்டுமா?:

ஒருவேளை நீங்கள் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாத, பாதுகாப்பான, நிலையான ரிட்டன்களை குறுகிய கால இலக்குகளுக்காக எதிர்பார்க்கிறீர்கள் என்றால் ஃபிக்சட் டெபாசிட் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். வீடு வாங்குதல் அல்லது ஓய்வு கால செல்வதை சேகரிப்பது போன்ற நீண்ட கால பொருளாதார இலக்குகளுக்கு
SIP-ஐ யை தேர்வு செய்யலாம். ஆனால் இதில் கட்டாயமாக ரிஸ்க் இருக்கும்.

.



Source link