பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், அவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றவும், பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் பெயர் எல்ஐசி பீமா சகி யோஜனா என்பதாகும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் பெண்களின் நிதி மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமின்றி, தொழில் முனைவோராகும் வாய்ப்பும் கிடைக்கும்.

எல்ஐசி பீமா சகி திட்டத்தை ஹரியானா மாநிலம் பானிபட்டில் பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். 18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்துப் பெண்களும் குறைந்தபட்ச தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விளம்பரம்

கிராமப்புறங்களில் பலருக்கு இன்சூரன்ஸ் சென்றடையவில்லை. இதன் காரணமாக, இப்பகுதி பெண்களுக்கு காப்பீட்டு பயிற்சி அளித்து, அவர்களை எல்ஐசி ஏஜென்ட்களாக மாற்றுவதன் மூலம், ஏராளமானோருக்கு காப்பீட்டுகளை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில், பெண்களுக்கு முதலில் இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் எல்ஐசி ஏஜென்ட்களாக பணியாற்றுகிறார்கள்.

எல்ஐசி பீமா சகி யோஜனா என்றால் என்ன?

எல்ஐசி பீமா சகி யோஜனா என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஒரு லட்சியத் திட்டமாகும். இதன் கீழ் 18 முதல் 70 வயது வரையிலான பெண்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் எல்ஐசி ஏஜென்ட்களாகவும், எல்ஐசியில் டெவலப்மென்ட் அதிகாரிகளாகவும் ஆவதற்கு வாய்ப்பைப் பெறுவார்கள்.

விளம்பரம்

பீமா சகி யோஜனா என்பது பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மூன்று ஆண்டு உதவித்தொகை திட்டமாகும். இது நிதிச் சேவைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்க சிறப்புப் பயிற்சி மற்றும் உதவித்தொகைகளை வழங்குகிறது. அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.7,000 முதல் ரூ.5,000 வரை நிலையான உதவித் தொகையாகப் பெறுவார்கள். மேலும், பாலிசியைப் பெறுவதற்கான கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை முடித்த பிறகு, பயிற்சி பெற்றவர்கள் எல்ஐசி ஏஜென்ட்களாக பணியாற்றலாம் மற்றும் எல்ஐசியில் டெவலப்மென்ட் ஆபிஷர் பதவியையும் பெறுவார்கள்.

விளம்பரம்

இதையும் படிக்க:
eDaakhil மூலம் ஆன்லைனில் நுகர்வோர் புகாரை பதிவு செய்வது எப்படி..? முழு விவரம் இதோ!

தகுதிக்கான அளவுகோல் என்ன?

வயது வரம்பு: 18 முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் பங்கேற்கலாம்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியற்றவர்கள்: LIC ஊழியர்கள் அல்லது ஏஜென்ட்களின் உறவினர்கள், ஓய்வுபெற்ற LIC ஊழியர்கள், முன்னாள் ஏஜென்ட்கள் மற்றும் தற்போதைய ஏஜென்ட்கள் ஆகியோர் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

இதையும் படிக்க:
பல பேங்க் அக்கவுன்ட்ஸ்களை வைத்திருப்போருக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்குமா? உண்மை என்ன…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

விளம்பரம்

உதவித்தொகை மற்றும் கமிஷன்:

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். முதல் ஆண்டில் நீங்கள் 24 பேருக்கு காப்பீடு செய்து, குறைந்தபட்சம் முதல் ஆண்டு கமிஷன் ரூ.48,000 (போனஸ் கமிஷன் தவிர்த்து) பெற வேண்டும். முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.7,000 உதவித்தொகை கிடைக்கும். இரண்டாம் ஆண்டில் உதவித்தொகை ரூ.6,000. ஆனால், இதற்கு முதல் ஆண்டில் செய்யப்பட்ட பாலிசிகளில் குறைந்தது 65 சதவீதம் இரண்டாவது ஆண்டு முடியும்வரை நடைமுறையில் இருப்பது அவசியம். மூன்றாம் ஆண்டில் ரூ.5,000 உதவித்தொகை கிடைக்கும். இதற்கு, இரண்டாவது ஆண்டில் செய்யப்பட்ட பாலிசிகளில் குறைந்தபட்சம் 65 சதவீத பாலிசிகள் மூன்றாம் ஆண்டு முடியும்வரை நடைமுறையில் இருக்க வேண்டியது அவசியம்.

விளம்பரம்
குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாத 10 பழங்கள்.!


குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாத 10 பழங்கள்.!

விண்ணப்பதாரர்கள் பின்வரும் செல்ஃப் அட்டெஸ்டேட் டாக்குமெண்ட்களை அப்ளிகேஷன் ஃபார்ம் உடன் சமர்ப்பிக்க வேண்டும்:

  1. வயது சான்று

  2. முகவரி சான்று

  3. கல்வி தகுதிச் சான்று

.



Source link